- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தின் கதை கற்பனை அல்ல, என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் - இயக்குனர்...

கருப்பு படத்தின் கதை கற்பனை அல்ல, என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் – இயக்குனர் ஆர்ஜே பாலாஜி போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

ஆரம்பத்தில் ரேடியோஜாக்கியாக இருந்து பிறகு ஐபிஎல் கமெண்ட்ரி செய்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. நான் ஸ்டாப்பாக அவர் படபட என பேசும் வேகம்தான் அவரது முக்கிய அடையாளம். பிறகு காமெடி நடிகராக மாறி ஹீரோவாகவும் நடித்து இப்போது இயக்குனராகவும் ஜெயித்திருக்கிறார். கருப்பு படம் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது.

நடிகர் சூர்யா நடித்த கருப்பு படத்தில் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தியேட்டர் விசிட் செய்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு நாள் இரவில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் நடந்து போய்க்கொண்டிருந்தேன்.

- Advertisement -

அப்போது மர்ம நபர்கள் என்னை வழிமறித்து என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி என்னுடைய நகையை பறித்துச் சென்றார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகை மீண்டும் கிடைத்தது. ஆனால் நகையை திரும்ப பெறுவதற்கு நீதிமன்றத்தில் நிறைய தடவை நான் அலைய வேண்டியிருந்தது. அந்த அனுபவம் என்னை மிகவும் பாதித்தது.

அப்போதுதான் என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. மேலும் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் மிளகாய் அரைக்கும் வழக்கத்தையும் கதையுடன் இணைத்து கிராமத்து நம்பிக்கைகள் நீதிக்கான போராட்டம் மனிதர்களின் கோபம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை கலந்து கருப்பு படத்தின் கதையை உருவாக்கினேன் என்று இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஒரு திரைப்பட இயக்குனராக கற்பனையாக கதை உருவாக்காமல் உண்மை சம்பவத்தை திரைக்கதையாக மாற்றிய ஆர்ஜே பாலாஜிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கருப்பு படம் முழுவதும் இடம்பெறும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் மற்றும் கிராமத்து பின்னணியுடன் அமைந்த திரைக்கதை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இதே போல் இதற்கு முன்பு ஆர்.ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படமும் கடவுள் பக்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு முக்கிய திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்தது என்பதும் குறிப்பிடப்பட்டது. இப்போது மூக்குத்தி அம்மன் 2 படம் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். அந்த படமும் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்