- Advertisement -
Homeபொழுதுபோக்குபடங்களில் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் உரிமை ஹீரோக்களுக்கு கூட இல்லை, அவர்களிடம்தான் உள்ளது -...

படங்களில் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் உரிமை ஹீரோக்களுக்கு கூட இல்லை, அவர்களிடம்தான் உள்ளது – பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வேதனை!

- Advertisement -

இன்றைய சினிமாத் துறையில் வியாபாரத்தில் ஓடிடி தளங்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாக மாறிவிட்டது. தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க செய்யும் முதலீட்டில் பெரும் பங்கு ஓடிடி நிறுவனங்கள் டிஜிட்டல் உரிமம் பெறுவதன் மூலம் திரும்ப கிடைப்பதால் ஓடிடி வியாபாரம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

இப்போதைய சூழலில் சினிமாத்துறையில் ஓடிடி தளங்களின் பங்கு என்பது வியாபாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்து விட்ட சூழ்நிலையில், டிஜிட்டல் ரைட்ஸ்சில் பெரிய விலை கிடைப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் யுவர் பேக்கர்ஸ் பிளே என்ற ஓடிடி தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் துவக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ( பெப்சி) தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி பங்கேற்றார். அந்த விழாவில் ஆர்கே செல்வமணி பேசியதாவது, ஓடிடியும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல ஓடிடி வந்தது. இப்போது ஓடிடி சினிமாவை கட்டுப்படுத்தும் ஒரு நிலைக்கு வந்துவிட்டது.

முன்பு போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்களை வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் இப்போது படங்கள் வாங்குவதையே நிறுத்தி விட்டார்கள். மேலும் அவர்கள்தான் படங்களின் ரிலீஸ் தேதியையே முடிவு செய்கிறார்கள். ஹீரோக்கள் கூட இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியவில்லை. அப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா இருந்து வருகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் சுமார் 1000 படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதில் நிச்சயம் ஒரு 200 நல்ல படங்களாவது இருக்கும். இந்த சூழலில் தமிழில் ஒரு ஓடிடி நிறுவனம் தொடங்கியது மகிழ்ச்சி. குறிப்பாக படத்தின் லாபத்தில் 20 சதவீதம் சினிமா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன் என்று ஆர்கே செல்வமணி பேசினார்.

இதுகுறித்து யுவர் பேக்கர்ஸ் பிளே ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா கூறுகையில், சிறிய படங்களை பார்க்க வைக்கும் ஒரு முயற்சிதான் இது. இதில் சப்ஸ்கிரிப்சன் கட்டணம் கிடையாது. ரசிகர்கள் இலவசமாகவே படத்தை பார்க்கலாம். படத்தை பார்த்துவிட்டு விருப்பம் இருந்தால் விரும்பிய தொகையை கட்டணமாக அளிக்கலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்