- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கே…? - அஜீத்குமார் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அவமதிப்பு நோட்டீஸ்...

இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கே…? – அஜீத்குமார் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி எச்சரித்த இளையராஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். அவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி என்ற படம் வெளியானது. மார்க் ஆண்டனி பட டைரக்டர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் திரிஷா அர்ஜூன்தாஸ் சுனில் பிரசன்னா பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். ரோமியோ பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 230 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ஏஞ்சோடி மஞ்சக்குருவி ஒத்த ரூபா தாரேன் இளமை இதோ இதோ போன்ற பாடல்களின் ரீமிக்ஸ் வெர்ஷன்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன.

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தில் தனது இசையில் உருவான பாடல்களை தனது அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த பாடல்களின் சட்டபூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்று விட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதில் தெரிவித்தது.

அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அனுமதி பெற்றதாக கூறப்படும் அந்த உரிமையாளர் யார் என்பது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டது.

- Advertisement -

இதையடுத்து தனது அனுமதி இன்றி பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்பதால் படத்தில் வரும் 3 பாடல்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே வெளியான திரைப்படத்தில் உள்ள 3 பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி குட்பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா தரப்பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனது பாடல்கள் அந்த படத்தில் தொட்ந்து பயன்படுத்துவதை நிறுத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் நோட்டீஸில் தயாரிப்பு நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்