- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன்… அந்த பெயரை டைட்டிலாக வைத்தது எப்படி? -...

விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன்… அந்த பெயரை டைட்டிலாக வைத்தது எப்படி? – இயக்குனர் ஆர்கே செல்வமணி சொன்ன சீக்ரட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. நடிகர் பிரசாந்த் நடித்த செம்பருத்தி படத்தை இயக்கிய ஆர்கே செல்வமணி, அந்த படத்தில்தான் நடிகை ரோஜாவை அறிமுகம் செய்து வைத்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் நடிகை ரோஜா தமிழில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆர்கே செல்வமணி இயக்கிய பல படங்களில் நடிகை ரோஜா கதாநாயகியாக நடித்தார். அப்போது நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இடையே காதல் ஏற்பட்ட நிலையில் பல ஆண்டுகள் காதல் நீடித்த நிலையில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.

- Advertisement -

தமிழில் ஆர்கே செல்வமணி இயக்கிய மக்கள் ஆட்சி புலன் விசாரணை அரசியல் ராஜஸ்தான் ராஜமுத்திரை அடிமைச்சங்கிலி ராஜாளி உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. எப்போதுமே அரசியல் கதைக்களத்தில் உருவான கதைகளை படமாக்குவதில் ஆர்வம் கொண்டவர் ஆர்கே செல்வமணி என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது அரசியல் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கின்றன.

இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய படங்களில் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய 2 படங்களுமே மாஸ் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. இதில் கேப்டன் பிரபாகரன், விஜயகாந்துக்கு 100வது படமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ரஜினி கமல் நடித்த 100வது படங்கள் தோல்வியடைந்த போது, விஜயகாந் நடித்த 100வது படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. கடந்த 1991ம் ஆண்டில் வெளியான கேப்டன் பிரபாகரன் படம் தற்போது மீண்டும் புதிய தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வருகிற 22ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

இந்த படம்தான் நடிகர் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமான முதல் படம். மேலும் சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் லிவிங்ஸ்டன் என பலருக்கும் இந்த படம் ஒரு முக்கிய படமாக அவர்களது சினிமா வாழ்க்கையில் அமைந்தது.
இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படம் குறித்து சமீபத்தில் நடந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியதாவது, என்னை நம்பி என்னுடைய அப்பா அம்மாவே பணம் கொடுக்க யோசித்த நேரத்தில், விஜயகாந்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு என்னை நம்பி எடுத்த படம்தான் கேப்டன் பிரபாகரன்.

அன்று ஈழத் தமிழர்களுக்காக தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த். அப்போதுதான் இந்த படத்துக்கு பிரபாகரன் என பெயர் வைக்க முடிவு செய்தோம். பின்னர் தளபதி பிரபாகரன் என வைக்கலாம் என்று சொன்னேன். அதன்பிறகு திடீரென கேப்டன் பிரபாகரன் என்று டைட்டில் தோன்றியது. அதையே வைக்க விஜயகாந்தும் உடனே ஒப்புக்கொண்டார் என ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்