- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் குறித்து விமர்சித்த எஸ்ஏ சந்திரசேகர் - கடைசியில இவரை,...

லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் குறித்து விமர்சித்த எஸ்ஏ சந்திரசேகர் – கடைசியில இவரை, அவருடன் போய் கோர்த்து விட்டுட்டாங்களே?

- Advertisement -

கடந்த 1980களில் சமுதாய புரட்சி கருத்துகளை தனது படங்களில் தைரியமாக சொன்னவர் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர். இவரது மகன்தான் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய். அந்த காலத்தில் எஸ்ஏ சந்திரசேகர் படங்கள் என்றாலே, சமுதாய விழிப்புணர்வும், தவறை தட்டிக் கேட்கும் கதாநாயகன் கேரக்டரும் கண்டிப்பாக இருக்கும்.

ஒரு சமுதாய பொறுப்புள்ள இயக்குநராக அவரது படங்கள் வெளிவந்து இருக்கின்றன. குறிப்பாக நான் சிவப்பு மனிதன் என்ற ரஜினி, அம்பிகா, பாக்யராஜ் நடித்த படம், எஸ்ஏ சந்திரசேகர் இயக்கம்தான். ரவுடியிசம், போலீஸ் அராஜகம், சட்டத்தின் நிலைப்பாடு என பல விஷயங்களை இதில் சுட்டிக் காட்டியிருப்பார்.

- Advertisement -

இப்போதும் சினிமாவில் நடித்து வரும் எஸ்ஏ சந்திரசேகர் மாநாடு, டிராபிக் ராமசாமி, கொடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜய், துவக்கத்தில் தந்தை எஸ்ஏசி ஆலோசனைப்படி தான், படங்களில் நடித்து வந்தார். இப்போது ஆண்டுக்கணக்கில் அவருடன் பேசாமல், தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தேசிங்கு ராஜா 2 படம் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ் ஏ சந்திரசேகர், தனது மகன் நடித்த விஜய் லியோ படம் குறித்து தன் விமர்சனத்தை மறைமுகமாக பதிவு செய்தார். குறிப்பாக அந்த படத்தின் இயக்குநர், படம் குறித்து பாராட்டிப் பேசிய போது மகிழ்ந்த அவர், செகண்ட் ஆப் சரியில்லை. பெற்ற தந்தையே பிள்ளைகளை நரபலி தருவது போன்ற நம்பிக்கைகள், அந்த மதத்தில் இல்லை என்று சொன்ன போது, நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் என, போனை கட் செய்து விட்டதாகவும் கூறினார்.

- Advertisement -

தனது மகன் ஹீரோவாக நடித்த படம் என்று தெரிந்திருந்தும் அதுபற்றிய விமர்சனத்தை வெளிப்படையாக எஸ்ஏ சந்திரசேகர் பொதுவெளியில் சொன்னது வைரலானது. அதுமட்டுமின்றி பொறுப்புடன் படம் எடுங்கள். 3 மணி நேர படத்தில், 3 நிமிஷமாவது நல்ல விஷயத்தை சொல்லுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, லியோ படம் குறித்து ப்ளு சட்டை மாறன் செய்த விமர்சனத்தை முன்வைத்து, எஸ்ஏ சந்திரசேகர் பேசியதை ட்ரோல் செய்து, ப்ளு சட்டை மாறன் முகமும், எஸ்ஏ சந்திரசேகர் குரலில் பின்னணியில் ஒலிக்கும்படி செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அது இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, ப்ளு சட்டை மாறனும் தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்