- Advertisement -
Homeபொழுதுபோக்குநீட் போராட்டத்தை சினிமாக்காரங்க திசை திருப்பாதீங்க, மத்திய அரசின் கைப்பிடிக்குள் கல்வி சுருங்கி விடக்கூடாது -...

நீட் போராட்டத்தை சினிமாக்காரங்க திசை திருப்பாதீங்க, மத்திய அரசின் கைப்பிடிக்குள் கல்வி சுருங்கி விடக்கூடாது – இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்!

- Advertisement -

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திரைப்பட கலைஞர்கள் மக்களின் வலியை பேசவும் அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை தட்டிக் கேட்கவும் பூரணமான தார்மீக உரிமை உண்டு. ஆயினும் கலைஞர்களும் உணர்ச்சிவசப்பட்டு இந்த போராட்டத்தின் திசையை திருப்பி விடக்கூடாது என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் ஒவ்வொரு சொல்லும் நம்மை வெளிக்காட்டுபவை. அதற்கு பொருளுண்டு. நீட் தேர்வு என்பது திறமையை அளக்கும் கோல் என்று சொல்வது எளிது. ஆனால் கோடிக்கணக்கில் பணம் கொட்டி படிக்க வைக்கும் பயிற்சி மையங்களில் வாசலில் நிற்கக்கூட முடியாத கிராமத்து ஏழை மாணவனின் தவிப்பை யார் புரிந்து கொள்வது?

- Advertisement -

அரசு பள்ளி மாணவர்களின் ஒற்றை கனவை அந்த வணிக வளாகங்கள் எப்படி நசுக்கின்றன என்பதை இந்த சமயம் யோசிக்க வேண்டும். மருத்துவ இடங்களும் கல்லூரிகளும் பெருகியிருப்பதை காட்டிவிட்டு அது நீட்டின் மகத்துவம் என்று வாதிடுவது எதார்த்தத்தை மறைக்கும் வேலை.

மருத்துவ கட்டமைப்பு வளர்வதும் மருத்துவ இடங்கள் அதிகரிப்பதும் இந்த நாட்டின் கட்டமைப்பும் மக்களின் தேவையும் தானே தவிர நுழைவுத் தேர்வின் கருணை அல்ல. நீட் இல்லாமல் இந்த இடங்கள் விரிவுபடுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

அதனால் தான் முதல்வர் ஜோசப் விஜய் குறிப்பிடுவது போல கல்வி என்பது மத்திய அரசின் கைப்பிடிக்குள் சுருங்கி விடக்கூடாது. அது மீண்டும் மாநில பட்டியலுக்கு வரவேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டுவது முற்றிலும் சரியானது.

ஒவ்வொரு மாநிலத்தின் மண்ணுக்கேற்ற கல்வி முறை இருக்கையில் அதை கணக்கில் எடுக்காமல் அந்தந்த மக்களின் துடிப்பும் புரியாமல் மத்தியிலிருந்து திணிக்கப்படும் தேர்வு முறைகள் கூட்டாட்சி தத்துவத்தின் ஆணிவேரை அசைகின்றன என்பதை சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து இது என்று இயக்குனர் சீனு ராமசாமி அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்