- Advertisement -
Homeபொழுதுபோக்குபகுத்தறிவு என்ற பெயரில் மதங்களை தாக்கி பேசக்கூடாது - உதயநிதியை மறைமுகமாக கண்டித்த இயக்குனர் சீனுராமசாமி!

பகுத்தறிவு என்ற பெயரில் மதங்களை தாக்கி பேசக்கூடாது – உதயநிதியை மறைமுகமாக கண்டித்த இயக்குனர் சீனுராமசாமி!

- Advertisement -

சமீபத்தில் தமிழக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார். இந்நிலையில் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, சிந்தித்துப் பார்க்கிறேன். ஒருவரை நாத்திகராக உருவாக்க வேண்டும் என்றால் அல்லது அப்படி ஒருவர் உருவாக வேண்டும் என்றால் அது விஞ்ஞானபூர்வமான தனி உரையாடல்கள், கூட்டு உரையாடல்கள் மற்றும் தத்துவ பகிர்வுகள் மூலமாக தான் சாத்தியமாகும்.

நான் மிக சுருக்கமாக சொல்வேன். உலகம் படைக்கப்பட்டது என்று நம்புவர் ஆத்திகர். உலகம் உருவானது என்று நம்புபவர் நாத்திகர். பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள் இந்த வழிமுறையை தான் கடைபிடிப்பார்கள். ஒற்றை செல் உயிரினமான அமீபாவிலிருந்து இந்த உலகம் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்ற தத்துவங்களின் அடிப்படையில் பேசத் தொடங்கி, டயலெட்டிக்ல் மெட்டீரியலிசம் என்கிற இயங்கியல் வாதத்திற்கு வருவார்கள்.

உதாரணமாக கார்ல் மார்க்ஸ், மதம் ஒரு அபின். ஏழைகளின் ஏக்க பெருமூச்சு என்று சொன்னார். அதற்கான காரணத்தை தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும். அதேபோல் சார்லஸ் டார்வின் தன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்த போது அவர் எந்த மத நம்பிக்கைகளையும் நேரடியாக கேலி செய்யவில்லை. மாறாக இயற்கையின் தரவுகளையும் ஆதாரங்களையும் மட்டுமே தர்க்கபூர்வமாக முன் வைத்தார். அதுவே ஒரு மாபெரும் அறிவு புரட்சிக்கு வித்திட்டது.

இதை விடுத்து வெறுமனே மத வழிபாடுகளையோ சடங்குகளையோ அல்லது மக்களின் நம்பிக்கைகளையோ கேலி செய்வதன் மூலம் ஒருவரை பகுத்தறிவுவாதியாக மாற்றிவிட முடியாது. ஒருவருக்கு நோய் வரும் போது அவர் செய்யும் பிரார்த்தனையை கிண்டல் செய்வதை விட மருத்துவ அறிவியலின் அவசியத்தை அவரிடம் பொறுமையாக எடுத்துரைப்பதே உண்மையான விழிப்புணர்வாக மாறும்.

மாறாக நம்பிக்கைகளை கேலி செய்வது கடுமையான எதிர் விளைவுகளையும் உண்டாக்கும். கடவுள் மீது நம்பிக்கை உள்ள ஒருவரிடம் கடவுளை நிந்தித்து பேசும்போது அவர் ஒரு மதவெறியராக மாறிவிடுகிற அபாயமே இங்கு அதிகம். சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அதை ஆதரிக்கிறவர்கள் பகுத்தறிவு என்ற பெயரில் எந்த ஒரு தனி வழிபாடுகளையோ சம்பிரதாயங்களையோ மத உணர்வுகளையும் சிறுபான்மையாக பேசவோ சட்டென்று நேரடியாக தாக்கிப் பேசவோ கூடாது.

அப்படி புண்படுத்தினால் சமூக நல்லிணக்கம் உண்டாகாமல் மத பூசல்கள் தான் பெருகும். புரிதல்களையும் மாற்றங்களையும் தர்க்கபூர்வமான உரையாடல்கள் மூலமாக தான் கொண்டுவர முடியும். இதை தான் விஞ்ஞான கழகத்தாரும் கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் தான் கம்யூனிச நாடுகளில் கூட வழிபாட்டுத் தலங்கள் தனி மரியாதையுடன் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன என்று இயக்குனர் சீனு ராமசாமி அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்