கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகெங்கிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படமானது முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், மோகன்லால், வசந்த் ரவி என நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இரண்டாவது வாரமாக வெற்றி நடை போட்டு வரும் ஜெயிலர் திரைப்படம் பல கோடி ரூபாய் லாபத்தை தந்துள்ளதால் அந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று தெரிகிறது. எப்பொழுதுமே ஒரு படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் பட்சத்தில் அந்தப் படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் சார்பில் விலை உயர்ந்த கார் பரிசாக கிடைப்பதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஜெயிலர் படத்தின் இயக்குனரான நெல்சனுக்கும் கலாநிதி மாறன் தரப்பிலிருந்து பெரிய அன்பளிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் பல்வேறு வகையான கார்களை டெஸ்ட் ட்ரைவ் செய்துள்ளதால் ஏதாவது ஒரு கார் பரிசளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லியுடன் ஒரு யூடியூப் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனக்கு ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் கிடைக்கப்போகும் பரிசு குறித்து நகைச்சுவையான கலகலப்பான பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் ரோல்ஸ் ராயல்ஸ் கார் பரிசாக கொடுத்தாங்கலாமே? என ரெடின் கிங்ஸ்லி கேட்டார். அதற்கு பதில் அளித்த நெல்சன் : ரோல்ஸ் ராயல்ஸ் கொடுத்தா நல்ல தான் இருக்கும் என்று கூறினார்.
உடனே ரெடின் கிங்ஸ்லி அப்போ கார் இல்லையா? என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு நெல்சன் : காரெல்லாம் தரல ஒரு டிவி தான் தரப்போறாங்க. எல்லோருக்குமே ஒவ்வொரு டிவி தரப்போறாங்க என்று கலகலப்பாக பேசினார். பிறகு கிங்ஸ்லி எனக்கு என்ன தரப் போகிறாய்? என கேட்க உனக்கு வேண்டுமென்றால் ஒரு முத்தம் தரேன் வாங்கிட்டு போ என சிரித்துக் கொண்டே நெல்சன் கூறினார். அவரது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. நெல்சன் என்னதான் இப்படி கூறியிருந்தாலும் நிச்சயம் அவருக்கு விலையுயர்ந்த கார் இன்னும் சில தினங்களில் பரிசாக வழங்கப்படும் என்று தெரிகிறது.





