- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெட் வேகத்தில் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வீரதீர சூரன்; 7 நாள் வசூல் நிலவரம்- இந்த...

ஜெட் வேகத்தில் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வீரதீர சூரன்; 7 நாள் வசூல் நிலவரம்- இந்த வேகத்தில் போனா பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் சேர முடியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் விக்ரம். நடிப்பில் கேரக்டரில் தன்னால் இயன்ற வரை சிறந்த ஆற்றலை 100 சதவீதம் திரையில் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். நடிகர் கமலுக்கு அடுத்தப்படியாக சிறந்த திரைக் கலைஞனாக இருந்து வருகிறார்.

கடந்தாண்டில் வெளியான தங்கலான் படத்தில் விக்ரம் நடிப்பு அபாரமாக இருந்தாலும் கதை திரைக்கதை அந்த அளவுக்கு வலுவாக இல்லாததால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இயக்குனர் பா ரஞ்சித் தன் அறிவாளித்தனத்தை காட்டும் காட்சிகளை வைத்து படத்தை சொதப்பி விட்டதாக பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த படம் வீர தீர ரசூரன். சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிகை துஷாரா விஜயன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த வீர தீர சூரன் படம் கடந்த 27ம் தேதி வெளியானது.

இந்த படம் ரிலீஸ் நாள் அன்றே சில பிரச்னைகளை சந்தித்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற விதித்த தடை காரணமாக காலையில் படம் ரிலீஸாகாமல் மாலையில்தான் படம் ரிலீஸானது. எனினும் மாலை வரை காத்திருந்த ரசிகர்கள் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படத்தை பார்த்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கு தரவில்லை.

ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் விக்ரம் நடிப்பு மாஸ் ஆக இருக்கிறது. துஷாரா விஜயனும் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். ஆனால் எஸ்ஜே சூர்யா பல காட்சிகளில் வீணடிக்கப்பட்டதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். ஒரு நாள் இரவில் நடக்கும் படத்தில் இன்னும் விறுவிறுப்பான காட்சிகள் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இதற்கிடையே வீர தீர சூரன் படம் முதல் நாளில் 3.25 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்து 2 வது நாளில் வசூல் ரூ. 10 கோடியை தாண்டியது. 4 நாட்களில் ரூ. 27 கோடி ரூபாய் வசூலை எட்டியது. இப்போது 7 நாட்களில் வீரதீர சூரன் வசூல் நிலவரம் ரூ. 37 கோடியை எட்டியுள்ளது. ஜெட் வேகத்தில் வசூல் நிலவரத்தை எதிர்பார்த்த விக்ரம் ரசிகர்கள், ஆமை வேகத்தில் இப்படி மெதுவாக போனால் ரூ. 100 கோடி வசூல் சாத்தியம்தானா என புலம்பி வருகின்றனர்.

சற்று முன்