தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருப்பவர் இயக்குனர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளாக பல சூப்பர் ஹிட் மாஸ் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 படம் பலத்த தோல்வி அடைந்தது. எனினும் அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தியன் 3 படத்தை மிகச் சிறப்பாக கொண்டு வரும் திட்டத்தில் சங்கர் இருந்து வருகிறார்.
இதற்கிடையே மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேல்பாரி என்ற நாவல், வரலாற்று கதையை திரைப்படமாக்க இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே திட்டமிட்டுள்ளார். அதற்காக வேள்பாரி கதையை எழுதிய சு வெங்கடேஷனிடம் ஷங்கர் உரிமம் வாங்கி வைத்திருக்கிறார். அந்த படத்தை முக்கிய நடிகர்களை நடிக்க வைத்து, அந்த வரலாற்று கதையை படமாக இயக்க திட்டமிட்டுள்ளார்.
ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் டிரெய்லரில், வேள்பாரி கதையில் வரும் சில சம்பவங்கள் இருப்பதை பார்த்து ஷங்கர் பலத்த அதிர்ச்சி அடைந்தார். அதேபோல் இன்னும் சில படங்களிலும், வெப் சீரியல்களிலும் வேல்பாரி கதையில் வரும் சம்பவங்களை சில இயக்குனர்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
இந்த வரலாற்று கதையின் உரிமம் ஷங்கர் பெற்றுள்ள போது, வேள்பாரி கதை படமாக்க தொடர்ந்து தாமதம் செய்யும் பட்சத்தில் அந்த கதையில் உள்ள முக்கிய அம்சங்களை எல்லாம் மற்ற இயக்குனர்கள் எடுத்து பயன்படுத்தி விடுவார்கள் என்ற நிலையில், இயக்குனர் ஷங்கர் இப்போது முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
அதனால் கேம் சேஞ்சர், இந்தியன் 3 படங்களை முடித்துவிட்டு உடனடியாக வேள்பாரி கதையை திரைப்படமாக இயக்க அவர் முடிவு செய்து இருக்கிறார். இதற்காக வேள்பாரி கதையில் தமிழ் முகங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால், இயக்குனர் சங்கர் நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்கள் இருவரும் வேள்பாரி படத்தில் நடிக்க பேசி இருக்கிறார். ஆனால் இன்னும் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தார்களா என்று தெரியவில்லை.
எனினும் வேள்பாரி கதையை விரைவில் படமாக்குவது முக்கியம் என்ற சூழலில் இயக்குனர் சங்கர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறார். மேலும் வேள்பாரி கதையை நான் வாங்கி இருக்கிறேன். அதை யாரும் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ஷங்கர் ஏற்கனவே எச்சரித்துள்ளார். எனினும் அந்த கதையில் வரும் முக்கிய சம்பவங்களை தங்கள் படங்களில் பயன்படுத்த இயக்குனர்கள் தீவிர ஆர்வம் காட்டுவதால், மிக விரைவில் வேள்பாரி படத்தை திரைப்படம் ஆக்குவது என்ற முடிவுக்கு இயக்குனர் ஷங்கர் தள்ளப்பட்டுள்ளார்.





