- Advertisement -
Homeபொழுதுபோக்குமாதவன் நடிப்புக்கு வரவேற்பு கிடைக்கலையா? எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராத ஜிடிஎன் - ஓடிடி ரிலீஸ்சில்...

மாதவன் நடிப்புக்கு வரவேற்பு கிடைக்கலையா? எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராத ஜிடிஎன் – ஓடிடி ரிலீஸ்சில் பட்டைய கிளப்புமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தந்தவர் நடிகர் மாதவன். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜிடிஎன். இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படுகிற கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறுதான் நடிகர் மாதவன் நடிப்பில் ஜிடிஎன் என்ற படமாக உருவாகி வெளியானது.

இந்த படத்தை இயக்கியவர் நடிகர் கிருஷ்ணகுமார் ராம்குமார். இவர் திருடா திருடி என்ற படத்தில் நடிகர் தனுஷின் அண்ணனாக நடித்திருந்தார். இன்னும் பல தமிழ் படங்களில் அவர் நடித்திருக்கிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் போதிய வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

மாதவன் ஜிடி நாயுடு கேரக்டரில் நடித்துள்ள இந்த ஜிடிஎன் படத்தில் நடிகர் சத்யராஜூம் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தின் பல காட்சிகளில் அழுத்தம் இல்லை. திரைக்கதை ஓட்டத்தில் நேர்த்தியான இயக்கம் இல்லை. முக்கியமான தகவல்கள் எல்லாமே மேலோட்டமான காட்சிகளாக தரப்பட்டுள்ளதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதற்கிடையே இந்த படம் மிக விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. ஏனெனில் நடிகர் மாதவன் நடித்த சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றன. அத்துடன் அவர் பல வெப் சீரிஸ்களிலும் மாதவன் நடித்து இருப்பதால் அதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளன.

- Advertisement -

அதனால் திரையில் ஏமாற்றிய ஜிடிஎன் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் போது பலத்த ஏமாற்றத்தை தருகின்றன.

அதே நேரத்தில் தியேட்டரில் ஓடாத சில படங்கள் ஓடிடி தளங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று விடுகின்றன. உதாரணமாக கருப்பு படம் தியேட்டர்களில் மாஸ் காட்டியது. ஆனால் ஓடிடி தளத்தில் அந்த படம் பிளாப் ஆனது. அதுபோல் தியேட்டரில் பிளாப் ஆன ஜிடிஎன் படம் ஓடிடி தளத்தில் ஒருவேளை பெரிய வரவேற்பை பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்