- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, இந்தியன் 3 படம் உருவாக இத்தனை மாதங்கள் ஆகுமா? இயக்குனர் ஷங்கர் போட்டாரே ஒரு...

என்னது, இந்தியன் 3 படம் உருவாக இத்தனை மாதங்கள் ஆகுமா? இயக்குனர் ஷங்கர் போட்டாரே ஒரு போடு – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. கமல் அப்பா மகன் என 2 வேடங்களில் நடித்திருந்தார். வர்மக்கலை கற்ற இந்தியன் தாத்தா லஞ்சம் ஊழல் போ்வழிகளை கொலை செய்வது படத்தின் மையக் கதையாக இருந்தது.

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். பாடல்கள் ஒவ்வொன்றும் இப்போதும் ரசிக்கும்படியான பாடல்களாக இருக்கின்றன. இந்த படத்தில் சேனாபதி கேரக்டரில் நடித்த கமலுக்கு 3வது முறையாக தேசிய விருதும் கிடைத்தது.

- Advertisement -

இதையடுத்து இந்தியன் 2ம் பாகம் கடந்தாண்டில் வெளியானது. சித்தார்த் பாபி சிம்ஹா எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் கமலுடன் நடித்திருந்தனர். படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இது இயக்குனர் ஷங்கர் படம்தானா என்ற சந்தேகப்படும் அளவுக்கு இந்த படம் கதை திரைக்கதையில் ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியது.

கடந்தாண்டில் வெளியான படங்களில் மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்ற படங்கள் 2 தான். அது இந்தியன் 2 படமும், கங்குவா படமும்தான். அதனால் இந்தியன் 3 படம் பெரிய அளவில் வெற்றிப் படமாக தர இயக்குனர் ஷங்கரும் கமலும் முடிவு செய்திருக்கின்றனர்.

- Advertisement -

இப்போது ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், இந்தியன் 3 படத்துக்கும் இந்த அவப்பெயர் தொடரக் கூடாது என்பதில் இயக்குனர் ஷங்கர் அதிக கவனமாக இருக்கிறார். அதனால் இந்தியன் 3 படத்தை இன்னும் மெருகேற்றி சிறப்பாக தரும் திட்டத்தில் உள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷங்கர் கூறுகையில், இந்தியன் 3 படத்துக்கான விஎப்எக்ஸ் பணிகள் இன்னும் நிறைய மீதி உள்ளது. இன்னும் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். அதனால் இன்னும் 6 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறியிருக்கிறார். அதனால் இந்த ஆண்டில் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் இந்த படம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்