- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு படம் எடுத்துட்டா நீ பெரிய கல்வி அறிஞரா? லப்பர் பந்து பட இயக்குனரை...

ஒரு படம் எடுத்துட்டா நீ பெரிய கல்வி அறிஞரா? லப்பர் பந்து பட இயக்குனரை சகட்டு மேனிக்கு விளாசிய நாம் தமிழர் கட்சி சீமான்!

- Advertisement -

சென்னையில் தமிழக அரசு சார்பில் கல்வி விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசி சில கருத்துகளை தெரிவித்து தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருப்பது இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், சச்சின் டெண்டுல்கர் படித்தாரா இளையராஜா படிச்சாரா ஏஆர் ரகுமான் படிச்சாரா என்று நிறைய பேர் கேட்பார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். அப்படி ஜெயித்தவர்கள் சிறு நூறு பேர்கள்தான். ஆனால் கல்வியால் ஜெயித்தவர்கள் தான் இங்கு அதிகம். நீங்கள் அதையே பின் தொடருங்கள். விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்கள் ஆகாது என்று அந்த விழாவில் அவர் பரபரப்பாக பேசியிருந்தார்.

- Advertisement -

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழரசன் பச்சமுத்து, தமிழக அரசு பள்ளிகளில் கொண்டு வந்துள்ள காலை நேர சிற்றுண்டி திட்டம் குறித்தும் கல்வி உதவி தொகைகள் குறித்தும் பாராட்டி பேசியிருந்தார். நான் கிராமத்தில் வாழும் மிடில் கிளாஸ். ஞாயிறு தினங்களில் கூட இட்லி கறிக்குழம்பு எங்களுக்கு கிடைக்காது. பொங்கல் தீபாவளிக்கு இட்லி கறிக்குழம்பு கிடைக்கும் வாழ்க்கை வாழ்ந்தவன் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, ஒரு படம் எடுத்துவிட்டால் நீ பெரிய கல்வி அறிஞரா? யார் உன்னை அந்த மேடையில் நின்று பேச வைத்தது? நீ ஒரு இயக்குனர். அதுவே உன் அடையாளம். உன் கல்வியால் தான் நீ அந்த நிலைக்கு வந்தாயா? தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொன்னேன்.

- Advertisement -

அதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கைதட்டிக் கொள்ள சிலர் பேசுவது தவறு. முதல்வர் துணை முதல்வரின் கல்வித் தகுதி என்ன, பிரதமர் மோடியின் கல்வித்தகுதி என்ன, உதயநிதி தானே சொல்கிறார், என்னோடு படித்தவர்கள் எல்லாம் வக்கீல் ஆகிவிட்டார்கள். ஆனால் படிக்காமல் நான் துணை முதல்வர் ஆனேன் என்று.

அப்படியிருக்க படிக்காதவர்களும் முன்னேறி இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை என்று நாம் தமிழர் கட்சி சீமான் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது. தவெக தலைவர் விஜயை தாறுமாறாக பேசிக்கொண்டிருந்த சீமான் இப்போது இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மீது இப்படி ஆவேசம் காட்டியிருப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்