- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 கேம் சேஞ்சர் பிளாப் படங்களுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் செய்யப் போகும் தரமான...

இந்தியன் 2 கேம் சேஞ்சர் பிளாப் படங்களுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் செய்யப் போகும் தரமான சம்பவம் – சியான் விக்ரம் பெயரும் இதில் அடிபடுகிறதே?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 15 தான். ஜெண்டில்மேன் படத்தில் இயக்குனராக அறிமுகமான ஷங்கர், தனது முதல் படத்தில் நடிகர் அர்ஜூன் நாயகனாக வைத்து இயக்கினார். தொடர்ந்து அர்ஜூன் நடித்த முதல்வன் படமும் மாஸ் ஹிட் படமாக மாறியது.

தொடர்ந்து காதலன் பாய்ஸ் இந்தியன் ஜீன்ஸ் சிவாஜி எந்திரன் 2.ஓ நண்பன் அந்நியன் ஐ நாயக் கேம் சேஞ்சர் என 15 படங்களை இயக்கிய ஷங்கருக்கு 13 படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் கடந்தாண்டில் வெளியான இந்தியன் 2 படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதே போல் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான படம் கேம் சேஞ்சர். நேரடி தெலுங்கு படமான இதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடித்திருந்தார். அஞ்சலி கியாரா அத்வானி சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த படத்துக்கு தமன் இசையமைத்து இருந்தார்.

இந்தியன் 2 தோல்விக்கு பிறகு வெளியாகும் ஷங்கர் என்ற எதிர்பார்ப்புடன் கேம் சேஞ்சர் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை பொருத்த வரை தயாரிப்பாளர் தில்ராஜூக்கு ரூ. 200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து கமல்ஹாசன் திரும்பிய நிலையில் இந்தியன் 3 படப்பிடிப்பை விரைவில் ஷங்கர் துவங்க வாய்ப்புள்ளது. ஆனால் படத்தை எடுத்த வரை போட்டு காட்டினால் மட்டுமே படப்பிடிப்புக்கான தொகையை தருவதாக லைகா நிறுவனம் கெடுபிடி காட்டி வருகிறது.

இதற்கிடையே இந்தியன் 3 படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்க திட்டமிட்டுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பவர், நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் என்றும் கூறப்படுகிறது. அந்நியன் ஐ படங்கள் தனக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் அதுபோன்ற ஒரு கதையில் துருவ் விக்ரம் நடிக்க வேண்டும் என்று நடிகர் சியான் விக்ரம் கருதியுள்ளார். இயக்குனர் ஷங்கரிடம், தனது மகன் நடிப்பில் ஒரு படம் இயக்குங்கள் என்று சியான் விக்ரமே ஷங்கரிடம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்