- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் மகனும் நடிகை ஜோதிகா மகளும் இணைந்து அந்த படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பார்களா?...

நடிகர் விஜய் மகனும் நடிகை ஜோதிகா மகளும் இணைந்து அந்த படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பார்களா? – நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த படங்களில் அசத்தலான வெற்றிப் படங்களில் மிக முக்கியமானது குஷி. தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் ஜோதிகா நடித்த படம் குஷி. இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 25ம் தேதி ரீ ரிலீஸாகிறது. இந்த படத்தில் விவேக் மும்தாஜ் நிழல்கள் ரவி விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்னர். தேவா இசையமைத்திருந்தார்.

குஷி படத்தின் இயக்குனர் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா பேசியதாவது, குஷி படத்தை எடுத்த விதமே வித்தியாசமானது. கொல்கத்தாவில் பிறந்த ஹீரோவும் குற்றாலம் அருகே பிறந்த ஹீரோயினும் எப்படி சேருகிறார்கள் என்ற விஷயத்தை படத்தின் தொடக்கத்திலேயே சொன்னேன். அது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் திரைக்கதை வெற்றி பெற்றது.

- Advertisement -

நான் நடிக்க தான் வந்தேன். ஆனால் இயக்குனர் ஆகிவிட்டேன். இப்போது தமிழ் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். இப்போது கில்லர் என்ற படத்தை டைரக்ட் செய்கிறேன். அந்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறேன். குஷி படம் தெலுங்கிலும் பவன் கல்யாண் பூமிகா நடித்து பெரிய ஹிட் ஆனது. அந்தப் படத்தால் எனக்கு தெலுங்கில் நல்ல பெயர் கிடைத்தது. பிறகு இந்தியில் குஷி படம் உருவானது.

குஷி படத்தில் அந்த இடுப்புக்காட்சி பற்றி பலரும் கேட்கிறார்கள். அந்த காலத்தில் காதல் படங்களில் அரசியல் ஜாதி மதம் ஏற்றத்தாழ்வு குடும்ப பகை ஆகியவை வில்லத்தனமாக சித்தரிக்கப்பட்டன. நான் புதுசாக சிந்திக்க நினைத்தேன். அதனால் காதலுக்கு காதலர்களே அவர்களின் ஈகோவே எதிரி என்று கதை உருவாக்கினேன். அப்போது அந்த இடுப்பு சீன் வந்தது. நான் ஏன் இடுப்பை பார்க்கக்கூடாது?

- Advertisement -

நீ என் கேர்ள் பிரண்ட் என்று ஹீரோ கேட்டு, ஹீரோயின் அதை ஓகே சொல்லிவிட்டால் படம் முடிந்து விடும். ஆனால் அந்த இடுப்பு பிரச்னையை திரைக்கதையில் பெரிதாக்கினேன். படமும் பேசப்பட்டது. குஷி 2 படம் எடுக்க வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம். நல்ல யோசனை தான். இப்போது விஜய் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் அவரது மகன் சஞ்சய் அழகாக இருக்கிறார். ஜோதிகாவின் மகளும் வளர்ந்துவிட்டார்.

அவர்கள் இருவரையும் வைத்து குஷி 2 உருவாகுமா? எனத் தெரியவில்லை. சில அதிசயங்களை உருவாக்க முடியாது. அதுவாக நடக்க வேண்டும். இறைவன் அமைத்துக் கொடுத்தால் எல்லாம் நடக்கும். அடுத்த காதலர் தினத்தன்று எனது நியூ படத்தை ரி ரிலீஸ் செய்யப் போகிறேன் என்று எஸ்ஜே சூர்யா பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்