- Advertisement -
Homeபொழுதுபோக்குவாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம் மீதே வழக்கு தொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா - ஓடாத...

வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம் மீதே வழக்கு தொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா – ஓடாத படத்துக்கு சம்பளம் மட்டும் கறாரா கேட்கலாமா என விமர்சிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

துரோகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. நடிகர் சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய சூரரைப் போற்று படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அடுத்து சுதா கொங்கரா சொன்ன புறநானூறு படத்தின் கதை சூர்யாவுக்கு பிடித்துப் போனதால் அந்த படத்தை அவரே தயாரித்து ஹீரோவாக நடிக்கவும் முன்வந்தார். இதுகுறித்த அறிவிப்பு 2023ம் ஆண்டு அக்டோபரில் வெளியானது.

ஆனால் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் புறநானூறு படத்திற்காக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தயாரிப்பாளர் சூர்யாவும் இயக்குனர் சுதா கொங்கராவும் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது. அந்த படத்தை தான் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மாற்றி பராசக்தி என்ற டைட்டிலில் சுதா கொங்கரா இயக்கினார். கடந்த பொங்கலுக்கு பராசக்தி வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனும் வில்லனாக ரவி மோகனும் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் புறநானூறு படத்தை பராசக்தி என்ற டைட்டிலில் அந்தப் படத்தை இயக்க சுதா கொங்கராவுக்கு வாய்ப்பு வழங்கியது டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான். அந்த படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமாக 150 கோடி ரூபாய் வரை அதிகரித்து விட்டது. எனினும் படத்தின் இயக்குனரை அபாரமாக நம்பிய தயாரிப்பு நிறுவனம் முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த படம் பலத்த தோல்வியை சந்தித்து பலத்த நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது.

ஆனால் தற்போது 8.39 கோடி ரூபாய் தனக்கு சம்பள பாக்கி என்று அந்த தயாரிப்பு நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் சுதா கொங்கரா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அத்துடன் பராசக்தி படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்புக்கும் இடைக்கால தடை வாங்கி இருக்கிறார். மேலும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு இதயம் முரளி படத்திற்கும் அவர் தடைகோரி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தயாரிப்பாளர்களிடம் படத்தின் பட்ஜெட்டை சொல்லும் இயக்குனர்கள் அந்த பட்ஜெட்டை மீறி தயாரிப்பாளர்களுக்கு செலவை இழுத்து விடுவது வழக்கமாக நடந்து வருகிறது. அதற்காக எல்லாம் எந்த ஒரு தயாரிப்பாளரும் இதுவரை நீதிமன்றத்தை நாடியது இல்லை. இனி அதையும் செய்ய வேண்டும் என்று இந்த விவகாரம் குறித்து கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.

இத்தனை கோடி ரூபாய் செலவழித்து எடுக்கப்பட்ட பராசக்தி படம் பெரிய அளவில் வரவேற்பையும் பெறவில்லை லாபத்தையும் தரவில்லை. இந்த படத்தை தயாரித்த வகையில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அந்த வகையில் ஒரு வெற்றிக்கரமான சிறந்த படத்தை கொடுக்கத் தவறிய இயக்குனர் சுதா கொங்கரா, தனது சம்பளத்தை பெறுவதில் மட்டும் இவ்வளவு உஷாராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பது அநியாயம் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்