- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 100 கோடி வசூலை அள்ளிய அரண்மனை 4, சுந்தர் சி போடும் தப்புக்கணக்கு -...

ரூ. 100 கோடி வசூலை அள்ளிய அரண்மனை 4, சுந்தர் சி போடும் தப்புக்கணக்கு – அவரது அதிரடி நடவடிக்கை அடுத்த படத்தில் கை கொடுக்குமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. இவரது படங்களில் காதல், காமெடி, கவர்ச்சிதான் முக்கிய அம்சங்களாக இருக்கும். அதற்காகவே லட்டு போன்ற அழகான நாயகிகளை தான் படத்தில் நடிக்க வைப்பார். உதாரணமாக குஷ்பு, நக்மா, மீனா, சௌந்தர்யா, கிரண், ரம்பா, தமன்னா போன்றவர்களை நடிக்க செய்திருப்பார்.

சுந்தர் சி படங்களை பொருத்த வரை பொழுதுபோக்கு படங்களாக தான் பெரும்பாலும் இருக்கும். அன்பே சிவம் போன்ற ஓரிரு படங்கள்தான் சப்ஜெக்ட் ஓரியண்டட் படங்களாக இருக்கும். சுந்தர் சி இயக்கிய படங்களில் பலவும், பழைய கருப்பு வெள்ளை படங்களின் தழுவல் கதைகளாக தான் இருக்கும். அதனால் பலருக்கும் அது புதிய படங்களாக தான் தெரியும்.

- Advertisement -

அந்த வகையில், பழைய படங்களின் கதைகளை பட்டி, டிங்கரிங் பார்த்து புது பெயிண்ட் அடித்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் கைதேர்ந்த இயக்குனர்களில் ஒருவராகவும் சுந்தர் சி இருந்து வருகிறார். இதில் கவர்ச்சியை சற்று தூக்கலாக விடும்போது, இளம் வயது ரசிகர்களை ஈர்த்து விடுகி்றார். கவுண்டமணி செந்தில், சந்தானம், வடிவேலு போன்ற காமெடியன்களை களத்தில் இறக்கி விட்டு படத்தை வெற்றி பெறச் செய்துவிடுகிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 என 3 படங்கள் வெளியானது. இதில் முதல் பாகம், இரண்டாம் பாகம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ஆர்யா ஹீரோவாக நடித்த அரண்மனை 3 பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

இதையடுத்து அரண்மனை 4 படம் சில மாதங்களுக்கு முன் வௌியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், கால்ஷீட் பிரச்னையால் கடைசியில் அவர் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து, படத்தின் இயக்குனர் சுந்தர் சியே அந்த கேரக்டரில் நடித்திருந்தார். படமும் மிகப்பெரிய வெற்றியடைந்து, ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது.

இப்போது, சுந்தர் சி அவர் இயக்கும் அடுத்த படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கு காரணம், அவர் ஹீரோவாக நடித்த அரண்மனை 4 படம் ரூ. 100 கோடி வரை வசூலில் சாதனை புரிந்ததுதான். அதனால் இனி, அவர் இயக்கும் படங்களில் அவரே ஹீரோ என்ற அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால் அரண்மனை 4 வெற்றிக்கு காரணம், நடிகை தமன்னா தான். அவரது அதிரடி கவர்ச்சியை ரசிக்க தான் ரசிகர்கள், திரண்டனர். சுந்தர் சி போடுவது தப்புக்கணக்கு என சினிமா விமர்சகர்கள் கிண்டலடிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்