- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இயக்குனர் எனக்கே விபூதி அடிச்சிட்டார், தயாரிப்பாளர் ஹீரோ எனக்கே அந்த படம் ரீமேக்...

அந்த இயக்குனர் எனக்கே விபூதி அடிச்சிட்டார், தயாரிப்பாளர் ஹீரோ எனக்கே அந்த படம் ரீமேக் என்று தெரியாது – ஓபனாக பேசிய இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

உள்ளத்தை அள்ளித் தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. தொடர்ந்து அருணாசலம் அன்பே சிவம் மேட்டுக்குடி முறைமாமன் ரெண்டு வின்னர் ஜானகிராமன் என பல வெற்றிப் படங்களை கொடுத்தார். முன்னணி நட்சத்திர இயக்குனராகவும் மாறினார்.

காதல் காமெடி கவர்ச்சி குடும்ப சென்டிமென்ட் ஆக்சன் என்ற ஜானரில் பொழுதுபோக்கான படங்களை கொடுத்து ஜனரஞ்சகமான இயக்குனராக ஜெயித்தவர் சுந்தர் சி. எப்படியும் இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதை போக்க சுந்தர் சி படங்கள் ரசிகர்களுக்கு கேரண்டியாக இருந்து வருகின்றன.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் ரஜினி நடிப்பில் கமல் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்க சுந்தர் சி கமிட் ஆன நிலையில் பிறகு அந்த படத்தை இயக்கவில்லை என்று திடீரென வெளியேறி விட்டார். இப்போது அந்த படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்ய உள்ளார்.

ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி நடிகராகவும் மாறினார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தலைநகரம் என்ற படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் நாய் சேகர் கேரக்டரில் வடிவேலு காமெடியில் அசத்தியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு பல படங்களில் சுந்தர் சி நாயகனாக நடித்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் நடிகர் சுந்தர் சி கூறியதாவது, தலைநகரம் படம் ரீமேக் என்று பல வருஷங்களாக தெரியாது. அதுதான் இயக்குனர் சுராஜின் திறமை. இதை வந்து எங்க அம்மா தான் சொன்னாங்க. அவங்களுக்கு வயசு 92 ஆகுது.

போன வருஷம் எங்க அம்மா சொல்றாங்க. நீ ஒரு மோகன்லால் படம் நடிச்சியே? அந்த படம் டிவியில் போட்டிருக்காங்க என்றார். மோகன்லால் படம் நான் என்ன நடிச்சேன்? அது வேற படம் என்றேன். இல்லேடா, அதுதான் எல்லாமே அப்படியே வருது பாரு என்றார். அப்புறம்தான் தலைநகரம் மோகன்லால் நடித்த படத்தின் ரீமேக் என்றே எனக்கு தெரிந்தது. நான்தான் தயாரிப்பாளர், ஹீரோ ஆனா எனக்கே அது தெரியலே என்று இயக்குனர் சுந்தர் சி அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்