- Advertisement -
Homeபொழுதுபோக்குமண்டாடி போன்ற ஒரு படத்தில் நாயகனாக நடிக்க சூரியால் மட்டுமே முடியும் - படத்தின் இயக்குனர்...

மண்டாடி போன்ற ஒரு படத்தில் நாயகனாக நடிக்க சூரியால் மட்டுமே முடியும் – படத்தின் இயக்குனர் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய பல நடிகர்களில் நடிகர் சூரியும் ஒருவர். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம்தான் அவரை ஹீரோவாக்கியது. தொடர்ந்து விடுதலை 2ம் பாகம் கருடன் கொட்டுக்காளி ஆகிய படங்களில் சூரி நடித்தார். இதில் கொட்டுக்காளி படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

இதையடுத்து மாமன் என்ற படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்திருக்கிறார். இதில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மாமன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணி செய்த மதிமாறன் புகழேந்தி இயக்கும் மண்டாடி என்ற படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். மகிமா நம்பியார், சத்யராஜ் போன்றவர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மண்டாடி படம் குறித்து இயக்குனர் மதிமாறன் புகழேந்தி கூறியதாவது, காற்றையும் அலையையும் கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவெளி போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர் மீன்பிடிக்கச் செல்லும் போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார்.

அவரையே ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர். மீன் பிடிக்கப் போகும்போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழி நடத்துவதைப் போல, பாய்மரப் படகு போட்டியின் போதும் வழிநடத்தக் கூடியவர் தான் மண்டாடி.

காமெடியனாக இருந்து கதையின் நாயகனாக மாறிக் கொண்டிருக்கும் சூரிக்காகவே எழுதப்பட்ட கதை இது. மண்டாடி கதாபாத்திரமும் அவரை மனதில் வைத்தே எழுதப்பட்டது. இந்த படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது.

அது சூரி போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். ஜி.வி பிரகாஷ்குமாரின் இசையும் எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவும் சேர்ந்து உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்சன் படமாக மண்டாடி படம் உருவாகி கொண்டு வருகிறது என்று இயக்குனர் மதிமாறன் புகழேந்தி கூறியிருக்கிறார்.

சற்று முன்