தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு இயக்குனராக இருந்தவர் தங்கர் பச்சான். இவர் சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதால் ஒளி ஓவியர் என்ற பட்டப் பெயரும் தங்கர் பச்சானுக்கு உண்டு. அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சமீபத்தில், கடலூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.
தங்கர்பச்சான் மிகச்சிறந்த ஒரு கலைஞர், படைப்பாளியாக கடந்த 1990களில் கொண்டாடப்பட்டவர். இவரது இயக்கத்தில் வெளியான அழகி படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ந்து பள்ளிக்கூடம் படத்தில் சீமான், நரேன் ஆகியோருடன் தங்கர்பச்சானும் ஒரு நண்பர் கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல், சொல்ல மறந்த கதையில் இயக்குனர் சேரன் நாயகனாக நடித்திருந்தார்.
அம்மாவின் கைபேசி, ஒன்பது ரூபாய் நோட்டு, கருமேகங்கள் கலைகின்றன, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, தென்றல், களவாடிய பொழுதுகள் என தங்கர் பச்சான் இயக்கிய பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில், நவ்யா நாயர் தங்கர்பச்சானுக்கு மனைவியாக நடித்திருந்தார். மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கையை இந்த படம் பிரதிபலித்தது. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தங்கர்பச்சான் இப்போது அவரது மகன் விஜீத் பச்சான் கதாநாயகனாக நடித்த ஒரு படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். பேரன்பும் பெருங்கோபமும் என்ற பெயரில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய பெரிய நிறுவனம் அல்லது பிரபலமான பேனர் இருந்தால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தங்கர்பச்சான் எதிர்பார்க்கிறார்.
அதனால் சில முன்னணி பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சில முக்கிய இயக்குனர்களிடம் போன் செய்து, தனது இயக்கத்தில் தன் மகன் ஹீரோவாக நடித்துள்ள பேரன்பும், பெருங்கோபமும் என்ற படத்தை வெளியிட வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படம் படுதோல்வியடைந்த நிலையில், இந்த படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. அதனால் தங்கர்பச்சான் போன் செய்தாலே பலரும் போனை எடுக்காமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் சமீபத்தில் வாழை படத்தை இயக்கி வெளியிட்டு அதன்மூலம் மிகப்பெரிய லாபம் அடைந்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ், அந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ்தான் வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தன்னுடைய படத்துக்கு மாரி செல்வராஜ் போன்றவர் வெளியீடு செய்தால் பெரிய வரவேற்பு கிடைக்கும். வாழை படம் போல, இதுவும் யதார்த்த சம்பவங்களை கொண்டு உருவான தரமான படம்தான் என்று மாரி செல்வராஜிடம் போன் செய்து பேசியிருக்கிறார் தங்கர்பச்சான். ஆனால் இன்னும் ஓகே சொல்லாமல், அந்த விஷயத்தை மாரி செல்வராஜ் பெண்டிங்கில் வைத்தால், தங்கர்பச்சான் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.





