நடிகர் அஜீத்குமார் சமீபத்தில் செய்த அந்த விஷயம் அவரது ரசிகர்களையே தலைகுனிய வைத்திருக்கிறது. அதாவது இரவு 3 மணிக்கு, விஜயகாந்த் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருவதாக கூறியிருக்கிறார். ஏனென்றால் அந்த நேரத்தில்தான் ரசிகர்கள் தொந்தரவு இருக்காதாம்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக உள்ள ரஜினி, விஜய் போல அஜீத்குமாருக்கு ரசிகர்கள் கூட்டம் கிடையாது என்பதுதான் உண்மை. அவர்களே அத்தனை கூட்டத்துக்கு மத்தியில் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து செல்லும்போது, தன்னை கடவுளின் அவதாரமாக நினைத்துக்கொள்ளும் அஜீத்குமாருக்கு அவரது உண்மை நிலவரம் தெரியவில்லை.
அதுவுமின்றி ரசிகர்கள் படம் பார்த்து, அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தியேட்டரில் குவிந்தால்தான் அவரது படத்துக்கு வசூல் குவிகிறது. கோடிக்கணக்ககில் தனக்கு சம்பளம் வருகிறது என்பதை கூட யோசிக்காமல் அஜீத்குமார் நடந்துக்கொள்வது, அவரது மழுங்கிய சிந்தனைத் திறனை காட்டுகிறது. தன்னை வாழ வைக்கிற ரசிகர்களை இந்த அளவுக்கு வெறுக்கிற, ஒதுக்குகிற ஒரே நடிகர் அஜீத்குமாராக மட்டுமே இருக்க முடியும்.
துபாயில் வீட்டில் ஓய்வில் இருந்த அஜீத்குமார் நினைத்திருந்தால், சென்னைக்கு தனி விமானத்தில் வந்து கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்க முடியும். சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பேசி, தன் இரங்கலை தெரிவித்திருக்கலாம். தன் வருத்தத்தை 4 வரி அறிக்கையாக தந்திருக்கலாம். ஆனால் எதுவுமே செய்யாமல், இரவு 3 மணிக்கு, துக்கம் விசாரிக்க விஜயகாந்த் வீட்டுக்கு வர அப்பாயின்ட்மென்ட் கேட்டது அல்பத்தனமாக, அபத்தமாக, மிக அசிங்கமான அவரது பண்பை வெளிப்படுத்தி விட்டது.
இதுகுறித்து ஒளிப்பதிவாளர், டைரக்டர் தங்கபச்சான் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், அஜீத்குமாரிடம் சென்று தங்கர்பச்சான் யார் என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வார். என்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் யாரையுமே அவருக்கு தெரியாது. ஏனெனில் அவர் வேறு ஒரு கிரகத்தில் இருக்கிறார். வேறு ஒரு கோளில்தான் வசிக்கிறார்.
தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை அவர் பார்க்க மாட்டார். தன்னுடைய உழைப்பை கொடுத்து சம்பாதித்த பணத்தை கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களை அவர் பார்க்க மாட்டார். அவர் ராஜபோக வாழ்க்கை வாழ காரணம், இந்த சினிமா ரசிகர்கள்தான் என்பதை எல்லாம் அவர் யோசிக்கவே மாட்டார். அதை கொடுத்தது இந்த உழைக்கும் மக்கள்தான்.ஆனால் அவர்கள் யாரும் அவருக்கு வேண்டாம். இதுமட்டும்தான் அவர் குறிக்கோள் என கடுமையாக விமர்சித்து இருக்கிறார் தங்கர்பச்சான்.





