- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் முருகதாஸ் எப்போ நேரம் ஒதுக்குவாரோ? காத்திருக்கும் ரெட்டத்தல படத்தின் இயக்குனர் - குருவுக்காக காத்திருக்கும்...

ஏஆர் முருகதாஸ் எப்போ நேரம் ஒதுக்குவாரோ? காத்திருக்கும் ரெட்டத்தல படத்தின் இயக்குனர் – குருவுக்காக காத்திருக்கும் சிஷ்யன், என்ன காரணம் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவர் தமிழில் சீனியர் நடிகரான விஜயகுமாரின் மகன். கடந்த 1995ம் ஆண்டில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அருண் விஜய் அறிமுகமானார். பல படங்களில் அருண் விஜய் நடித்திருக்கிறார்.

குறிப்பாக கௌதம மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜீத்குமாருக்கு வில்லனாக விக்டர் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். அருண் விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும் தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் அவரது நடிப்பு சிறப்பான கவனம் பெற்றது. இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள வணங்கான் படமும் அருண் விஜய் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

இதற்கிடையே கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்டத்தல என்ற படத்தில் அருண்விஜய் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே தடம் என்ற படத்தில் இரண்டு வேடங்களில் அருண் விஜய் நடித்திருந்தார்.

ரெட்டத்தல படத்தில் தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பாலாஜி முருகதாஸ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ரெட்டத்தல படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்பொழுது ரெட்டத்தல படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

ரெட்டத்தல படத்தின் ரப் காப்பி தயாரான நிலையில், இயக்குனர் ஏஆர் முருகதாஸூக்காக படத்தின் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் காத்திருக்கிறார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர் கிரிஷ் திருக்குமரன். அவர் இயக்குனரான பிறகும் ஏஆர் முருகதாஸ் இயக்கும் படங்களுக்கு உதவி இயக்குனராக இப்போதும் பணிபுரிவது வழக்கமாக உள்ளது. அவரை தன் குருவாகவே அவர் மதிக்கிறார்.

ரெட்டத்தல படத்தை தனது குருவான ஏஆர் முருகதாஸ் பார்த்துவிட்டு ஏதேனும் படத்தில் திருத்தங்கள், மாற்றங்கள் சொல்லும் பட்சத்தில் அதற்கேற்ப செயல்பட உள்ளார். ஆனால் இப்போது ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும், இந்தியில் சல்மான்கான் நடிக்கும் படத்திலும் பிஸியாக சூட்டிங்கில் இருக்கிறார். அதனால் அவர் நேரம் ஒதுக்கி ரெட்டத்தல படத்தை பார்க்க வேண்டும் என அவர் பல நாட்களாக காத்திருக்கிறார். குருவுக்கு இந்த அளவுக்கு மரியாதை செய்யும் இயக்குனர் கிரிஷ் திருக்குமரனை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்