தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக வரும் ஈழத்தமிழர் குடும்பம், ஒரு பிரச்னையில் சிக்கி விடுகிறது. அதிலிருந்து அந்த குடும்பம் எப்படி மீண்டு வருகிறது என்ற ஒரு அழுத்தமான கதையில் உருவான டூரிஸ்ட் ;பேமிலி படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இயக்குனர் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். அயோத்தி படம் தவிர பல தோல்விகளை படங்களை தந்த நடிகர் சசிக்குமாருக்கு, டூரிஸ்ட் ஃபேமிலி கம்பேக் தந்தது. சசிக்குமாரின் மனைவியாக சிம்ரன் நடித்திருந்தார். இருவருமே பண்பட்ட பக்குவப்பட்ட நடிப்பு படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
மேலும் இந்த படத்தில் மிதுன் ஜெய்சங்கர் கமலேஷ் யோகிபாபு எம்எஸ் பாஸ்கர் ரமேஷ்திலக் பகவதி பெருமாள் இளங்கோ குமரவேல் ஸ்ரீஜா ரவி யோகலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற படமாக இருந்தது.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் அபிஷன் ஜீவிந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாக பாராட்டினார்கள். இந்நிலையில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இப்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் மதன் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த் அறிமுகம் ஆகிறார். அவரது கேரக்டருக்கு சத்யா என பெயரிடப்பட்டுள்ளது. அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். ராங்கி என்ற படத்தில் திரிஷாவுடன் நடித்தவர் அனஸ்வரா ராஜன் என்பது கவனிக்கத்தக்கது. அவர்தான் இந்த படத்தில் மோனிஷா என்ற கேரக்டரில் கதாநாயகியாக நடிக்கிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தற்காலிகமாக புரொடக்சன் நம்பர் 4 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி என்ற வெற்றி படத்துக்கு பின் அவர் அடுத்த படம் டைரக்ட் செய்யாமல் ஹீரோவாக நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.





