- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஸ்வரூபம் படத்தை முதலில் டைரக்ட் செய்ய இருந்தது செல்வராகவன் தான் - திடீரென கமல் வேண்டாம்...

விஸ்வரூபம் படத்தை முதலில் டைரக்ட் செய்ய இருந்தது செல்வராகவன் தான் – திடீரென கமல் வேண்டாம் என சொன்னது ஏன்? வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!

- Advertisement -

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணன். நடிகை சோனியா அகர்வாலின் முன்னாள் கணவர் என சில அடையாளங்கள் இருந்தாலும் அத்தனையும் கடந்து தன்னை ஒரு சிறந்த படைப்பாளி என தனது படங்கள் மூலம் ரசிகர்களிடம் நிரூபித்தவர் இயக்குனர் செல்வராகவன்.

காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி ஆயிரத்தில் ஒருவன் புதுப்பேட்டை நானே வருவேன் இரண்டாம் உலகம் என தனது படங்களால் ரசிகர்களின் மனதை வென்றவர். சமீபகாலமாக அவர் நடிகராகவும் மாறிவிட்டார். பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் செல்வராகவன் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே ஒரு முக்கிய தகவல் நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம். இந்த படத்தை முதலில் டைரக்ட் செய்ய இருந்தது செல்வராகவன் தான். விஸ்வரூபம் படத்தை அவரை தான் கமல்ஹாசன் இயக்கச் சொன்னார். அதற்கு செல்வராகவனும் சம்மதித்தார்.

ஆனால் செல்வராகவன் ஸ்டைலும் கமல் ஸ்டைலும் ஒரு கட்டத்தில் ஒத்துவரவில்லை. அதன் காரணமாக விஸ்வரூபம் படத்திலிருந்து இயக்குனர் செல்வராகவன் வெளியேறி விட்டார். அதன் பிறகு தான் அந்த படத்தை கமல்ஹாசனே இயக்கி நடித்து அவரே வெளியிட்டார். பல பிரச்னைகளை கடந்து வெளியான விஸ்வரூபம் படம் மெகா பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் விஸ்வரூபம் படம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது, நான் ஒரு படம் இயக்க முடியாமல் போனதற்கு வருத்தப்படுகிறேன் என்றால் அது விஸ்வரூபம் படம் தான். அது எனக்கும் ஏக்கம் தான். உண்மையில் அது நல்ல கதை. கெட்டவர்கள் கெட்டவர்கள் என்று கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். நான் எடுத்திருந்தால் அவர்களின் அன்பான பக்கத்தை இன்னும் கொஞ்சம் காண்பித்திருக்கலாம்.

அந்த நாடு அப்படி தான் இருக்கும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அங்கு சென்று பார்த்தால் யாரோ ஒரு அம்மா உங்களுக்கு சாப்பாடு போட்டு சாப்பிடு என்று பாசத்துடன் சொல்வார்கள். அந்த உலகத்தை நான் வேறு மாதிரி காண்பித்திருக்கலாம். அவர்களது வாழ்க்கையை இன்னும் சூப்பராக காட்டியிருப்பேன். அவர்களுக்கு மட்டும் புதிய வாழ்க்கையாக இருக்கப் போகிறது? எல்லோரையும் வில்லன்களாக நினைத்து இருப்போம். ஆனால் அப்படி இல்லை. நான் இயக்குவதாக இருந்தபோது படத்துக்கு முதலில் கான் என்று பெயர் வைத்தோம். அது மிஸ் ஆனதில் வருத்தம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்