- Advertisement -
Homeபொழுதுபோக்குலக்கி பாஸ்கர் 2 மற்றும் தனுஷ் படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தந்த இயக்குனர் வெங்கி...

லக்கி பாஸ்கர் 2 மற்றும் தனுஷ் படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தந்த இயக்குனர் வெங்கி அட்லூரி – சூர்யா படத்தை பத்தி எதுவும் சொன்னாரா?

- Advertisement -

கடந்த மே மாதம் 1ம் தேதி சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் வெளியானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்த நிலையில், வணிக ரீதியாக சூர்யாவுக்கு இது வெற்றிப் படம் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கருப்பு படம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யா தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் அல்லது மமிதா பைஜூ அல்லது இருவருமே நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. 4 மாதங்களில் முடிவடையும் குறுகிய கால படமாக இது உருவாகிறது.

- Advertisement -

இயக்குனர் வெங்கி அட்லூரி ஏற்கனவே நடிகர் தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தை இயக்கியவர். அத்துடன் அவர் இயக்கிய லக்கி பாஸ்கர் படம் கடந்த ஆண்டில் தீபாவளிக்கு வெளியாக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நாயகியாக மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த சூழலில் வாத்தி படத்தின் தொடர்ச்சியாக அவர் 2ம் பாகம் வெளியாகிறதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. அதே போல் துல்கர் சல்மான் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற லக்கி பாஸ்கர் படத்தின் 2ம் பாகம் குறித்தும் ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்து இயக்குனர் வெங்கி அட்லூரி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இப்போது சூர்யா நடிக்கும் படம் குறித்த பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறேன். இந்த படத்துக்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் தனுஷ் நடித்த வாத்தி படத்தின் தொடர்ச்சியாக நான் எந்த படமும் எடுக்கும் ஐடியாக இப்போது இல்லை.

லக்கி பாஸ்கர் 2 படத்துக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. லக்கி பாஸ்கர் 2 படமும் நிச்சயம் மற்றொரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இயக்குனர் வெங்கி அட்லூரி தெளிவுப்படுத்தி இருக்கிறார். மேலும் வெங்கி அட்லூரி, துல்கர் சல்மான் இருவருமே நிறைய கமிட்மெண்டுகளில் இருப்பதால் லக்கி பாஸ்கர் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் அதிக நாட்களாகும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்