தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கிய படங்கள் எல்லாமே யதார்த்தமான கதைக்களத்தில் உருவான மிக சாதாரண படங்களாக தான் இருக்கும். படத்தில் பிரமாண்ட செலவுகள் எதுவுமே இருக்காது. பெரும்பாலும் பேமிலி டிராமா கதைகள்தான் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன.
அந்த வகையில் கடந்த 1990களில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் வானத்தை போல. இந்த படத்தில் விஜயகாந்த் அண்ணன் தம்பி என்ற 2 கேரக்டர்களில் நடித்திருந்தார். இதில் தம்பி விஜயகாந்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.
வானத்தை போல படத்தில் முதலில் நாயகியாக நடிக்க கமிட் ஆனவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிதான். விக்ரமன் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று நடிகை குஷ்புவிடம் அவர் கருத்து கேட்டிருக்கிறார். கதாநாயகியை அழகாகவும் மரியாதை காட்டும் இயக்குனர் விக்ரமன். நாயகிக்கு அவரது படத்தில் நல்ல முக்கியத்துவம் இருக்கும் என்று குஷ்பு உறுதியாக கூறியதால் வானத்தை போல படத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டி மும்பையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.
அதன்பிறகு அவருக்கு மேக்கப் டெஸ்ட் போட்டோ ஷூட் எல்லாம் படக்குழு தரப்பில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த படத்தில் ஷில்பா ஷெட்டி நடிப்பது திருப்தி இல்லை. ஷில்பா நடித்தால் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்காது என்று அவர் மறுத்துள்ளார்.
அதன்பிறகு அவருக்கு பதிலாக ரோஜாவை நடிக்க வைக்க முயற்சி நடந்துள்ளது. ஆனால் ரோஜாவும் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று கூறிய தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் பிறகு மீனா அந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி அவரே மீனாவை கமிட் செய்திருக்கிறார். அதன்பிறகுதான் அந்த படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அந்த படத்தில் மீனா மிக சிறப்பாக நடித்திருந்தார் என்று சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார். இந்த படத்தில் விஜயகாந்தின் தம்பிகளாக விஜயகாந்த் லிவிங்ஸ்டன் பிரபுதேவா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் 1990களில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக வசூலை அள்ளியது.





