- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இயக்கிய படத்தை குடும்பத்துடன் பார்க்க தியேட்டருக்கு போன போது… - டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு...

நான் இயக்கிய படத்தை குடும்பத்துடன் பார்க்க தியேட்டருக்கு போன போது… – டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு இப்படி ஒரு அனுபவமா? வியந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

ஒரு நல்ல திரைப்படம் தனக்கான வெற்றியை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள். அதுபோல் நல்ல கதைக்களத்தில் திரைக்கதையில் உருவாகும் ஒரு படத்தை ரசிகர்களே வெற்றி பெறச் செய்துவிடுவார்கள். ஒரு படத்தின் வெற்றி என்பது அதில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர், டெக்னீஷியன்கள் மட்டுமே தீர்மானிப்பது அல்ல. ரசிகர்கள்தான் தீர்மானிக்கின்றனர்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய உலகநாயகன் என கொண்டாடப்பட்டகமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தையே புறக்கணித்தவர்கள் நம் தமிழ் சினிமா ரசிகர்கள். இயக்குனர் யாராக இருந்தாலும், ஹீரோ யாராக இருந்தாலும் படத்தின் கதை திரைக்கதை நன்றாக இருந்தால் மட்டுமே இங்கு ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதற்கு இந்தியன் 2 படத்தை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் யதார்த்த கதைகளை கொண்ட படங்கள் என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பான் இந்தியா படங்களாக உருவாகும் கதை திரைக்கதையில் ஹீரோயிசம் பிரமாண்டம் இருக்கிற அளவுக்கு கதைக்களத்தில் யதார்த்தம் சிறிதும் இருப்பதில்லை. ஹீரோக்களை கொம்பாதி கொம்பன்களாக காட்டும் பான் இந்தியா படங்களை ஒரு தரப்பு ரசிகர்கள் விரும்புவதே இல்லை என்பதே கசப்பான உண்மை.

ஆனால் அதே நேரத்தில் காக்கா முட்டை சித்தா பண்ணையாரும் பத்மினியும் குட்நைட் குடும்பஸ்தன் மெய்யழகன் லப்பர் பந்து போன்ற யதார்த்த படங்களை வரவேற்கவும் ரசிகர்கள் தவறுவது இல்லை. அந்த வரிசையில் இப்போது சசிக்குமார் சிம்ரன் நடிப்பில் வெளிவந்துள்ள டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும் பாரட்டும் கிடைத்து வருகிறது.

- Advertisement -

கடந்த 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியான இந்த படம் 12 நாட்களில் ரூ. 51 கோடி வசூலை கடந்து வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அயோத்தி படத்துக்கு பிறகு நடிகர் சசிக்குமாருக்கு இந்த படம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறது. 24 வயதான இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது, டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் நிச்சயமாக ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி படமாக அமையும் என்று சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவில்லை. 3 நாட்களுக்கு முன்னால பேமிலியா நாங்க படத்துக்கு போனோம். ஆனா எங்களுக்கு டிக்கெட் கிடைக்கலே. நாங்க ட்ரை பண்ணியும் நிஜமாகவே டிக்கெட் கிடைக்கலே. என்னடா நம்ம படத்துக்கு நமக்கே டிக்கெட் கிடைக்கலையா என்று ஒருபுறம் இருந்தாலும் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது என்று இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்