- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் கிளம்பிய சர்ச்சை, இப்படி புதுசு புதுசா கெளப்பி...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் கிளம்பிய சர்ச்சை, இப்படி புதுசு புதுசா கெளப்பி விடறாங்களே? – இதுவும் நடிகர் சூர்யா பஞ்சாயத்துதான்

- Advertisement -

நடிகர் சூர்யா நடித்த சமீபகால படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. குறிப்பாக என்ஜிகே, எதற்கும் துணிந்தவன், தானா சேர்ந்த கூட்டம், காப்பான் போன்ற எதிர்பார்க்கப்பட்ட படங்கள் எதுவுமே அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. இதற்கிடையே ஜெய்பீம் படமும், சூரரைப் போற்று படமும் சூர்யாவுக்கு கவுரவமான வெற்றியை தேடித் தந்தன.

அதிலும் ஜெய்பீம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் போலதான் சூர்யா நடித்திருந்தார். படத்தில் நடிப்பில் பின்னி பெடலெடுத்தது நடிகர் மணிகண்டன்தான். லாக்கப் காட்சிகளில் மிக தத்ரூபமான நடிப்பை தந்து, ரசிகர்களை பதைபதைக்க வைத்திருந்தார். சூரரைப் போற்று படம், சுதா கொங்காரா இயக்கத்தில் வேற லெவலில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூர்யா, டைரக்டர் பாலா இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் இருந்தும் விலகி விட்டார். அதைத்தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க வேண்டிய புறநானூறு படத்திலும் அவர் தானாகவே முன்வந்து விலகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை பொருத்த வரை அவர், வெற்றி பெற முக்கிய காரணமாக இருப்பது டைரக்டர்கள்தான். குறிப்பாக நந்தா, சிங்கம், சூரரைப் போற்று, அயன் என அவரை ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கேரக்டராக உருவாக்கியது இயக்குனர்கள்தான். சூர்யாவுக்கு மட்டுமல்ல, இது ரஜினிக்கும் பொருந்தும். இதை மறக்காமல் ரஜினி இப்போதும் குறிப்பிட்டு பேசுவார். நான் இவ்வளவு உயரத்துக்கு வர எனக்கு கிடைத்த கேரக்டர்களும், அதை உருவாக்கிய டைரக்டர்களும்தான் என்றும் கூறுவார். ஆனால் சூர்யாவிடம் அந்த எண்ணம் இல்லை.

- Advertisement -

இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனது 44வது படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு அறிவிப்பை சூர்யா, நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில் ரப்பர் மரத்தில் அம்பு சொருகி நிற்பதை போன்ற ஒரு புகைப்படக் காட்சியில் சூர்யா 44 கார்த்திக் சுப்பராஜ் படம் என்று அந்த மரத்தில் எழுத்துகள் காணப்படும் நிலையில் அந்த ஸ்டில் வைரலானது.

நடிகர் சூர்யா நடித்து வந்த படங்களில் இருந்து வணங்கான், வாடிவாசல், புறநானூறு என 3 படங்களில் இருந்து விலகி விட்டார். வணங்கான் 41வது படம் என கூறப்பட்டது. வாடிவாசலும் எண்ணிக்கையில் இருந்தது. புறநானூறு படமும் எண்ணிக்கையில் இருந்த நிலையில், அந்த படங்களில் கமிட் ஆகிவிட்டு வெளியேறிய அவர், எப்படி கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிப்பதை 44 என்று குறிப்பிட முடியும் என்று கேள்வி கேட்டு, படத்தோட எண்ணிக்கையே சரியா தெரியாமல் விட்ருக்காங்க. அப்படீன்னா, படம் என்று கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்