நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இது ஏகே ரசிகர்களை மிகவும் கவலைப்பட செய்தது. ஏனென்றால் 2 ஆண்டுகளாக அஜீத் படம் எதுவுமே வெளியாகவில்லை.
தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் அஜீத்குமாரை திரையில் தரிசனம் செய்ய அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதனால் விடாமுயற்சி படத்தை பார்க்க இப்போதே தயாராகி வருகின்றனர். ப்ரீ புக்கிங் பலரும் தங்களது பதிவை ஆர்வமாக செய்யத் துவங்கி விட்டனர். பிப்ரவரி 6 என்பது ஏகே ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி, பொங்கலாக இருக்கப் போகிறது.
ஆனால் விடாமுயற்சி படம் துவங்கியது முதல் பல மாதங்களாக படப்பிடிப்பில் பிரச்னைகளும் சிக்கல்களும் நீடித்தது. ஒரு கட்டத்தில் 4 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பே நடக்காமல் கிடப்பில் போடப்பட்டது. அந்த நேரத்தில்தான் அஜீத்குமார் குட்பேட் அக்லி படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களின் படப்பிடிப்புகளும் பகல், இரவு என மாறி மாறி கலந்துக்கொண்டு நடித்து கொடுத்தார். ஏனெனில் அவர் துபாய் கார் பந்தயத்துக்கு போக வேண்டி இருந்ததால், கடந்த டிசம்பர் மாதத்துக்குள் 2 படங்களையும் முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்த சூழலில் பலமுறை விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனிக்கும், அஜீத்குமாருக்கும் இடையே விவகாரம் வெடித்துள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, விடாமுயற்சி படத்தை பார்க்கும் ஏகே ரசிகர்கள், உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் ஒன்றுதிரட்டி திட்டும் அளவுக்கு, இந்த படத்தில் ஒரு விஷயத்தை இயக்குனர் மகிழ் திருமேனி செய்திருக்கிறார். அதாவது அஜீத்குமாரின் ஒட்டுமொத்த இமேஜையே அடித்து சுக்குநூறாக நொறுக்கும் அளவுக்கு ஒரு காட்சியில் அஜீத்குமாரை காட்டியிருக்கிறார்.
அதே நேரத்தில் நேர்காணல்களில் பேசி வரும் மகிழ் திருமேனி இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்புகளுடன் வராதீங்க, நீங்க நினைக்கிற மாதிரி ஹீரோயிசம் காட்டுகிற அஜீத் பில்டப் செய்த காட்சிகள் எல்லாம் இதில் எதுவுமே இருக்காது என்று கூறி வருகிறார். மீண்டும் அஜீத்குமாரும் மகிழ் திருமேனியும் படம் பண்ண வாய்ப்பே கிடையாது. அந்தளவுக்கு இந்த படத்தில் பல கசப்பான அனுபவங்கள் நடந்ததாக தெரிய வந்துள்ளது, என்று ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





