நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரை வரவேற்று பாராட்டியவர்களை விட சினிமா துறை சார்ந்த பலரும் அவரை கடுமையாக விமர்சிக்கவே செய்தனர். அவருடன் பல படங்களில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பலரும் கூட விஜயின் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள் கூட சொல்ல மறந்து விட்டனர். இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.
அதே நேரத்தில் திமுக ஆதரவாளராக இருந்த நடிகர் போஸ் வெங்கட் நடிகர் விஜய் குறி்தது அடிக்கடி விமர்சனம் செய்தார். விஜயின் அரசியல் செயல்பாடுகள் அவரது அரசியல் கருத்துகள் குறித்தும் கேள்விகள் எழுப்பினார். இந்த சூழலில் சட்டசபை தேர்தலில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விருப்ப மனுவும் தாக்கல் செய்தார்.
ஆனால் திமுக வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் நடிகர் போஸ் வெங்கட்டுக்கு திமுக தொகுதி தரவில்லை. எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பும் தரவில்லை. இவ்வளவு தூரம் திமுகவுக்கு ஆதரவாக பேசியும் ஒரு தொகுதி ஒதுக்கவில்லையே என்று போஸ் வெங்கட் கடும் அப்செட்டில் இருக்கிறார்.
அதே போல் நடிகர் சத்யராஜ் திமுகவினர் மிக தீவிரமான ஆதரவாளர். அவரது மகள் திவ்யா சத்யராஜூம் கடந்த ஆண்டில் திமுகவில் நேரடியாக ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். அவருக்கு கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை தேர்தலில் நிற்க விருப்பமனு தாக்கல் செய்தார். எப்படியும் தன்னை வேட்பாளராக அறிவிப்பார்கள் என காத்திருந்தார்.
அவருக்கும் கடைசியில் திமுக டிமிக்கி கொடுத்து விட்டது. இந்த முறை திமுக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் திவ்யா சத்யராஜூக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாய்ப்பு தரவில்லை. இப்படி விஜய் குறித்து தாறுமாறாக விமர்சித்து பேசியும் திமுக தலைமை தன்னை வேட்பாளராக அறிவிக்கவில்லையே என்று திவ்யா சத்யராஜூம் நொந்து போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி திவ்யா சத்யராஜ் மற்றும் போஸ் வெங்கட்டும் திமுக தலைமை தங்களை ஏமாற்றிவிட்டதால் நடிகர் விஜயை தேவையில்லாமல் பேசி அவரது ரசிகர்களின் விரோதத்தை சம்பாதித்து கொண்டோமே என்றும் புலம்பி வருகின்றனர். அதனால் தான் நடிகர் சத்யராஜ் நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் பாராட்டி நெகிழ்ச்சியாக பேசியதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





