தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லனாக நடித்த அவர் பிறகு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்தார். இப்போது குணச்சித்திர வேடங்களில் அப்பா கேரக்டரில் பெரும்பாலான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திமுகவுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசார கூட்டங்களிலும் சத்யராஜ் பேசினார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டசத்து நிபுணராக இருக்கிறார். இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டில் திமுகவில் அவர் இணைந்தார். ஆனால் அவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் அவர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் கூறியதாவது, எனக்கு திருமணத்தில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. மோதிரம் மாற்றிக் கொள்வது தாலி கட்டிக் கொள்வது உள்ளிட்ட எந்த சடங்கு சம்பிரதாயங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது.
திருமணம் செய்து கொள்வதற்கு ஒரே மதம் ஒரே ஜாதி என்று இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. நமக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் அவருடன் இணைந்து வாழலாம். அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்காக இருவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அவசியம் கிடையாது.
மேலும் திருமணம் செய்துகொண்டு தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நான் ஏற்க மறுக்கிறேன். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அப்படி யாராவது குழந்தை பெற்றுக் கொண்டால் அதை நான் எதிர்க்க மாட்டேன்.
என்னை பொறுத்தவரையில் திருமணமே செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்காமல் இருவரும் தங்கள் வீட்டில் வசித்துக் கொண்டே இணைந்து வாழ முடியும் என்று திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார். இவரது விவகாரமான இந்த கருத்துகள் இப்போது இணையத்தில் பேசுபொருளாகி பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.





