- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிக்க வருவதற்கு முன் நடிகர் அஜீத்குமார் இந்த வேலை எல்லாம் பார்த்தாரா? அவரோட லட்சியம் அப்போ...

நடிக்க வருவதற்கு முன் நடிகர் அஜீத்குமார் இந்த வேலை எல்லாம் பார்த்தாரா? அவரோட லட்சியம் அப்போ என்ன தெரியுமா? – ஓபனா ஏகே சொன்னதுதான் இது!

- Advertisement -

சினிமாவில் எது எப்போது எப்படி நடக்கும் என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. சினிமாவில் நடனக் கலைஞராக வேண்டும் என்று வந்த கமல்ஹாசன் பின்னாளில் பெரிய நடிகராக மாறினார். இன்று விண்வெளி நாயகன் என்று கொண்டாடப்படுகிறார். காமெடியாக நடித்த சூரி இன்று கதாநாயகனாகி விட்டார். இயக்குனராக வந்த எஸ்ஜே சூர்யா இன்று நடிப்பு அரக்கன் என்ற பெயரில் வில்லனாக பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இயக்குனராக ஆசைப்பட்டு வந்தவர்கள் நடிகர்களாக தயாரிப்பாளர்களாக வினியோகஸ்தர்களாக மாறியிருக்கின்றனர். நடிக்க வாய்ப்பின்றி சினிமாவில் உதவி இயக்குனர்களாக மாறியவர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் அஜீத்குமார் சினிமாவில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான் என்று ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

அமராவதி படம்தான் அஜீத்குமார் நடித்த முதல் படம். ஆனால் வசந்த் இயக்கத்தில் ஆசை படத்தில் நடித்த பிறகுதான் அஜீத்குமார் ரசிகர்களிடம் அறிமுகமானார். பிறகு காதல் கோட்டை படம் தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து அஜீத்குமார் படங்கள் மாஸ் ஹிட் ஆன நிலையில் இன்று டாப் லெவல் நடிகராக அவர் வலம் வருகிறார்.

குட்பேட் அக்லி படத்துக்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடிக்காமல் கடந்த 6 மாதமாக காா் ரேஸில் அவர் பிஸியாக இருந்து வருகிறார். வரும் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸ் நீடிக்கும் நிலையில் வரும் நவம்பரில்தான் ஏகே 64 படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, ஸ்கூலில் படிக்கும் போது எனக்கு படிப்பு ஏறலே. பொய் சொல்லலே. படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்லே. அதனால படிப்பு ஏறலே. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் கத்துக்கணும். ஒர்க்‌ஷாப் ஓபன் பண்ணணும் என்று ஆசைப்பட்டேன். பைக்ஸ் கார்ஸ்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருந்தது எனக்கு. என்பீல்டு குரூப் ஆப் கம்பெனீஸ்ல 6 மாசம் ஒர்க் பண்ணினேன்.

ஒரு கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட்ல மெர்சன்டைசரா சேர்ந்தேன். நாலரை வருஷம் அங்க வேலைபார்த்துட்டு சொந்தமா ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சேன். சினிமாவுல நடிச்சது டோட்டலா ஆக்சிடென்ட். என்னிக்காவது ஒரு நாள் சொந்தமாக ஒரு கார்மென்ட் எக்ஸ்போர்ட்ஸ் சொந்த ஒரு கம்பெனி ஆரம்பிச்சு எக்ஸ்போர்ட் பண்ணுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. வெயிட் அண்ட் ஸீ என்று அந்த நேர்காணலில் அஜீத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்