- Advertisement -
Homeபொழுதுபோக்குமகள் திவ்யா எதிர்ப்பு… மகன் சிபிராஜ் ஆதரவு - எந்தப் பக்கம் நிற்கப் போகிறார் நடிகர்...

மகள் திவ்யா எதிர்ப்பு… மகன் சிபிராஜ் ஆதரவு – எந்தப் பக்கம் நிற்கப் போகிறார் நடிகர் சத்யராஜ்? – கட்டப்பாவுக்கு இப்படியும் ஒரு சோதனையா?

- Advertisement -

கரூரில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நூறுக்கும் மேற்பட்டோர் இதில் படுகாயம் அடைந்தனர். கூட்டம் நடத்தப்பட்ட இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் திரண்டு வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த துயர சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைந்துள்ளது. மேலும் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மாநில பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் இணை பொதுச்செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள் பலர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகள், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, விஜய் சாரின் பாடி கார்ட்ஸ்க்கு ஒரு சிறிய வேண்டுகோளை வைக்கிறேன். ஒரு பழைய வீடியோவில் உங்கள் பாடிகார்ட் தொண்டர் ஒருவரை வானில் இருந்து தூக்கி வீசுவதை பார்த்தேன்.

அந்த பையனுக்கு கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் அடிபட்டு இருந்தாலும் தலையில் அடிபட்டு இருந்தாலும் அவர் கோமாவிற்கு போயிருந்தாலோ அவரின் வாழ்க்கையே போயிருக்கும். உங்கள் தொண்டர்களை பார்த்து பயப்படாதீர்கள். அவர்களை தூக்கி வீசாதீர்கள். தொண்டர்களை பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவன் இல்லை.

- Advertisement -

தொண்டர்களுக்கு பாதுகாப்பு தருவது தான் உண்மையான தலைவன். மக்களை ஆள வேண்டும் என நினைப்பவர் உண்மையான தலைவன் கிடையாது. மக்களுக்காக பல ஆண்டுகளாக வாழ்பவர் தான் உண்மையான தலைவர் என அந்த வீடியோவில் விஜயை கிண்டலடிக்கும் வகையில் திவ்யா சத்யராஜ் பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில் சத்யராஜின் மகன் சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குஷி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை பதிவிட்டுள்ளார் அதில் விஜய், என்னை மட்டுமல்ல என இமேஜை கூட உங்களால ஒண்ணும் பண்ண முடியாது என்று அவர் வில்லனிடம் ஸ்கிரீனில் பேசும் வீடியோவை பதிவிட்டுள்ளார். சத்யராஜின் மகள் விஜயை கடுமையாக எதிர்த்துப் பேசிய நிலையில் அவரது மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்