- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது முகமூடி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோவா... நல்ல வேளையா தப்பிச்சுட்டாரு... ஜீவாதான்...

என்னது முகமூடி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோவா… நல்ல வேளையா தப்பிச்சுட்டாரு… ஜீவாதான் பாவம் போங்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர் மிஷ்கின். குறிப்பாக அவரது திரைப்படத்தில் வைக்கப்படும் கேமரா ஆங்கிள்கள் இங்கு பலரையும் கவரும். காலில் இருந்து காட்சியை விரிவுபடுத்தி கண்முன்னே கொண்டு வருவது மிஷ்கின் ஸ்டைல்.

 

அது சரியாக வந்ததால், அதனை தற்போது வரை தனது திரைப்படங்களில் அவர் தொடர்ந்து வருகிறார். மிஷ்கினின் முதல் திரைப்படமாக அமைந்தது சித்திரம் பேசுதடி. ஆனால் அந்த படம் திரையரங்களில் வந்த போது பாதி பேருக்கு தெரியாது. அப்போது வால மீனுக்கும் பாடல், பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டு அடிக்க, சித்திரம் பேசுதடி படத்தை தேடி போனார்கள் ரசிகர்கள்.

 

அதன்பிறகு மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் குட் மார்க் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. இரண்டு இணைபிரியா நண்பர்கள். இதில் ரௌடியாக சுற்றும் இளைஞன் எதிர்பாராத திருப்பதால் போலீஸ் ஆகிறான். காவல்துறை அதிகாரியாக உருவாக வேண்டும் என்று கனவு கண்ட இளைஞன், தவறான வழிக்கு செல்கிறான்.

 

இந்த இரண்டு பிளாட்டை மையமாக வைத்து அவர் எடுத்த அந்த அஞ்சாதே படத்தின் திரைக்கதை, திரையரங்களில் பார்ப்போர்க்கு சுவாரசியத்தை கூட்டியது. இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றி மூலம், மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் நுழைந்தார். இதன் பிறகு அவர் எடுத்த நந்தலாலா திரைப்படம் தோல்வியடைந்தது.

 

இந்த சூழலில் தான், பிரம்மாண்ட படத்தை எடுக்க முடிவு செய்து, முகமூடியை கையில் எடுத்தார் மிஷ்கின். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருப்பார். இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டே, இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியானது.

 

முதல் பாதியை அருமையாக எடுத்திருந்த மிஷ்கின் இரண்டாம் பாதியை கோட்டை விட்டார். இதனால் முகமூடி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அடியை மிஸ்கினுக்கு கொடுத்தது. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தில் முதலில் சூர்யா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் வெளியேற, ஜீவாவுக்கு வாய்ப்பு சென்று இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் தோல்வியடைந்ததால் இருவருக்குமே அது முன்னேற்றத்தை கொடுக்கவில்லை.

 

சற்று முன்