- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இயக்குனருக்கு விமர்சையாக நடைபெற்ற திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்... சிவகார்த்திகேயனும் இருந்திருக்காருப்பா....

பிரபல இயக்குனருக்கு விமர்சையாக நடைபெற்ற திருமணம்… நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்… சிவகார்த்திகேயனும் இருந்திருக்காருப்பா….

- Advertisement -

கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் கிங்காக திகழ்பவர் இயக்குனர் அட்லி. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கினார். பின்னர் பாலிவுட்டிற்கு சென்ற அவர், ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார்.

 

- Advertisement -

அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் சிபி சக்கரவர்த்தி. சிவகார்த்திகேயனை வைத்து டான் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அவர் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்திருந்தார்

 

- Advertisement -

தந்தைக்கு மகனுக்குமான உறவை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். சூரி பால சரவணன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் இடம் பெற்றிருந்தனர். குடும்ப பாசத்தையும் கமர்சியலையும் மையப்படுத்தி இந்த திரைப்படத்தை இயக்குனர் உருவாக்கியிருந்தார்.

 

2022 ஆம் ஆண்டு ரிலீசான டான் திரைப்படம், எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்திற்கு முன்னதாக டாக்டர் திரைப்படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் என்னும் பெருமையை சிவகார்த்திகேயன் பெற்றிருந்தார். அது டான் திரைப்படத்திலும் நீடித்தது.

 

கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி அந்த திரைப்படம் சாதனை படைத்தது. அதேசமயம் டான் திரைப்படத்தை பலரும் கலாய்த்து தள்ளினார்கள். அது ஒரு கிரிஞ்ச் திரைப்படம் என்றும், டாக்ஸிக் கதாபாத்திரத்திற்கான தந்தையை பாராட்டுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை துளி அளவு கூட பாதிக்கவில்லை.

 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த திரைப்படத்திலும், சிபி சக்கரவர்த்தியுடன் தான் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இதற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் வர்ஷினி என்பவரை, சிபி சக்கரவர்த்தி கரம்பிடித்து உள்ளார். ஈரோட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற, அதில் சிவகார்த்திகேயன் எஸ் ஜே சூர்யா நடித்த பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்