- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 21ம் தேதி வெளியான டிராகன் படம் - 8 நாட்களில் செய்த வசூல் இவ்வளவா?...

கடந்த 21ம் தேதி வெளியான டிராகன் படம் – 8 நாட்களில் செய்த வசூல் இவ்வளவா? ஏலே… நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டுன்னு நிரூபிச்சிட்டலே…

- Advertisement -

நடிகர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கடந்த 2019ம் ஆண்டில் இந்த படம், வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் வெளியானது. இந்த படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்திருந்தார். காஜல் அகர்வால் கேஎஸ் ரவிக்குமார் யோகிபாபு பொன்னம்பலம் ஆர்ஜே ஆனந்தி வினோதினி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தனது அடுத்த படம் லவ்டுடே படத்தை பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்தார். இதில் கதாநாயகனாக அவரே நடித்தார். இவானா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடிக்கு மேல் லவ் டுடே படம் வசூலித்தது.

இதைத் தொடர்ந்து ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. அனுபமா பரமேஸ்வரன் கேஎஸ் ரவிக்குமார் தேனப்பன் ஹயாடு லோகர் இவானா ஜார்ஜ் மரியன் இந்துமதி விஜே ஜித்து மிஷ்கின் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கல்லூரி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் அடாவடி கல்லூரி மாணவராக பிரதீப் நடிப்பு பெரிய அளவில் கிளிக் ஆகியிருக்கிறது. 48 அரியர்ஸ் வைத்த மாணவராக கல்லூரியை விட்டு வெளியேறிய அவர், ஒரு கட்டத்தில் அதே கல்லூரியில் 48 அரியர்ஸ் பேப்பர்களை கிளியர் செய்ய வேண்டிய நிலையில் நுழைவதுதான் படத்தில் ஹைலைட்டான விஷயம்.

இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக இயக்குனர் மிஷ்கின், நிறுவன அதிகாரியாக கௌதம் மேனன், நாயகனின் அப்பாவாக ஜார்ஜ் மரியன் என ஒவ்வொரு கேரக்டரிலும் அவர்களது நடிப்பு வேற லெவலில் இருக்கிறது. அதுவும் கிளைமாக்ஸில் இவானா மீண்டும் பிரதீப்புக்கு ஜோடியாவது ரசிகர்களை உற்சாக குரல் எழுப்ப வைக்கிறது.

டிராகன் படத்துக்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் என பிற மொழிகளிலும் வெளிநாடுகளிலும் இந்த படம் சக்கைப் போடு போட்டு வருகிறது. டிராகன் ரிலீஸான 8 நாட்களில் நேற்று வரை ரூ. 85 கோடி வசூலை கடந்திருப்பதாக படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் டிராகன் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

சற்று முன்