- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து மலையாளத்தில் வசூல் சாதனை செய்து வரும் நடிகர் மோகன்லால் - 58 மாணி நேரத்தில்...

தொடர்ந்து மலையாளத்தில் வசூல் சாதனை செய்து வரும் நடிகர் மோகன்லால் – 58 மாணி நேரத்தில் திரிஷ்யம் 3 வசூல் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். யதார்த்தமான நடிப்பை தரும் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர். தமிழில் சிறைச்சாலை உன்னைப் போல் ஒருவன் அரண் ஜில்லா புலிமுருகன் உள்ளிட்ட படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார்.

மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து திரிஷ்யம் 2 படமும் வெளியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்போது அதன் தொடர்ச்சியாக திரிஷ்யம் 3 படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

கடந்த 21ம் தேதி வெளியான திரிஷ்யம் 3 படம் முதல் நாள் வசூலில் 50 கோடி 35 லட்சம் ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 58 மணி நேரத்தில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரிஷ்யம் 3 படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் 3 நாட்களுக்குள் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

100 கோடி ரூபாய் வசூலை கடந்த நடிகர் மோகன்லாலின் 5வது படமாக திரிஷ்யம் 3 படம் அமைந்துள்ளது. இதற்கு முன்பு லூசிபர் புலி முருகன் தொடரும் ஆகிய படங்கள் மோகன்லால் நடித்து 100 கோடி ரூபாய் வசூலித்த படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மலையாள திரையுலகத்தில் இதுவரை 16 படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன. அதில் நடிகர் மோகன்லால் நடித்த படங்கள் தான் அதிகமாக 100 கோடி ரூபாய் வசூலை பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 200 கோடி ரூபாய் வசூலை கடந்த 5 படங்களில் மோகன்லால் நடித்த தொடரும் எல்2 எம்புரான் ஆகிய 2 படங்கள் இடம்பிடித்துள்ளன.

திரிஷ்யம் 3 படமும் 200 கோடி ரூபாய் வசூலை கடக்குமா என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும். ஆனால் அதே நேரத்தில் திரிஷ்யம் திரிஷ்யம் 2 படங்களைப் போல திரிஷ்யம் 3 படத்துக்கு பெரும்பாலான வரவேற்பு இல்லை. எதிர்மறையான விமர்சனங்களும் இருந்து வருகின்றன என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. முதல் 2 பாகங்களை போல இந்த 3ம் பாகத்தில் படத்தின் கதை திரைக்கதை அவ்வளவு சுவாரசியமாக இல்லை என்று படம் பார்த்த ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்