- Advertisement -
Homeபொழுதுபோக்குபஞ்சாயத்து பேசற சங்கத்திலேயே இப்படி ஒரு பஞ்சாயத்தா? இயக்குநர் பாக்யராஜூக்கு வந்த பெரிய தலைவலி -...

பஞ்சாயத்து பேசற சங்கத்திலேயே இப்படி ஒரு பஞ்சாயத்தா? இயக்குநர் பாக்யராஜூக்கு வந்த பெரிய தலைவலி – நாட்டாமை பண்ண ஆளில்லையே!

- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இடத்தில் இருந்தவர். இப்போதும் இருப்பவர். கடந்த 1980, 90களில் பாக்யராஜ் படங்கள் என்றாலே, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த காலகட்டத்தில் மிக இயல்பான கதாபார்த்திரங்களை கொண்டு, யதார்த்தமான படங்களை ரசிகர்களுக்கு தந்தவர்.

இயக்குநர் சிகரம் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக இருந்து பின்பு, சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். சுதாகர் – சுமதி, கவுண்டமணி, கள்ளாப்பட்டி சிங்காரம், காஜா செரீப், சங்கிலி முருகன் போன்றவர்கள் நடித்த இந்த படத்தில், கே பாக்யராஜூம் தெருவில் நாடகம் போடும், மில் தொழிலாளி வாலிபராக நடித்திருப்பார்.

- Advertisement -

இதில் பெட்டிக்கடை டெய்லர் காளியண்ணன் கேரக்டரில் கவுண்டமணி அசத்தியிருப்பார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை போல, இந்த படத்திலேயே கவுண்டமணியின் நடிப்பும், வசனங்களும் அவர் பிற்காலத்தில் மிகப்பெரிய இடத்துக்கு வருவார் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது என்றால் அது மிகையல்ல.

தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாக்யராஜ் மௌன கீதங்கள், முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள் என பல வெற்றிப்படங்களை தந்தவர். இந்தியாவின் சிறந்த கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர். எம்ஜிஆரின் கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்டவர். இப்போது, தென்னிந்திய தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே பாக்யராஜ் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த சங்கத்தில் செயலாளராக உள்ள லியாகத் அலிகானுக்கும், கே பாக்யராஜூக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் பேசிக்கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது இல்லை. இன்றைய சினிமாவில் கதை திருட்டு சார்ந்த பல பஞ்சாயத்துகள் இங்கு வரும் நிலையில், அதை இருவரும் சேர்ந்து அமர்ந்து விசாரிப்பது இல்லை.

இந்த சங்கத்தின் பொருளாளர் பாலசேகரன்தான் பாக்யராஜ் சொல்வதை லியாகத் அலிகானிடமும், அவர் சொல்வதை பாக்யராஜிடமும் மாறி மாறி சொல்லும் மீடியேட்டராக செயல்பட்டு வருகிறார். இந்த சங்க கட்டிடம் பழையதாக உள்ளது. இதை காலி செய்துவிட்டு புதிய கட்டிடத்துக்கு போவதற்கு கூட இருவரிடமும் நாட்டாமை பேச ஆளில்லாமல், பாலசேகரன் தவிக்கிறார். திருட்டு கதை பஞ்சாயத்தை விட இவங்க ஈகோ பஞ்சாயத்து பெருசா இருக்குதே என பலரும் புலம்பித் தீர்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்