தமிழ் சினிமாவில் நடிப்பில் அசுரர்களாக சில நடிகர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஒரே காட்சிக்கு பலவிதமான பாவனைகளை காட்டி நடிப்பதில் சில நடிகர்கள் கைதேர்ந்த நடிகர்களாக இருப்பார்கள். கேரக்டர்களை உள்வாங்கி நடிக்கும் போது, அவர்களிடம் இயல்பான நடிப்பு அனாயசமாக வெளிப்படுகிறது.
அந்த வகையில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சியான் விக்ரம், எஸ்ஜே சூர்யா, நாசர், ரகுவரன், நவரச நாயகன் கார்த்திக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களது நடிப்பில் சிறிதும் ஓவர் ஆக்டிங் இருக்காது. மற்றவர்களது நடிப்பை சற்று கவனித்து பார்த்தால், ஓவர் ஆக்டிங் அப்பட்டமாக வெளிப்படும்.
அதனால்தான் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணிரத்னம், பாலசந்தர், பி வாசு, அட்லி, பாலா போன்றவர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் காட்டுவார்கள். அப்படி அவர்கள் நடித்துக் காட்டுவதில் 50 சதவீதம் கேமரா முன் செய்துவிட்டாலே, திரையில் அவர்களது நடிப்பு பிரமாதமாக தெரிந்துவிடும்.
சில இயக்குனர்கள், காட்சியை மட்டும் தெளிவாக விளக்கிவிட்டு நடிகர், நடிகைகளையே நடித்துக் காட்டச் சொல்வார்கள். அப்படி நடித்துக் காட்டும் அவர்களிடம் சில திருத்தங்களை சொல்லி, அப்படி நடியுங்கள் என்பார்கள். இதில் பாலா போன்றவர்கள், ஒரே காட்சிக்கு 4 விதமாக நடிப்பை சொல்லி, அந்த மாதிரி அடுத்தடுத்து பண்ண செய்தும் படம் பிடித்து விடுவார்கள்.
இப்போது, இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நாயகனாக சியான் விக்ரம், வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யாவும் நடித்து வருகின்றனர். டைரக்டர் அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும், சித்தா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்துவரும் வீரதீர சூரன் படப்பிடிப்பில் நடிப்பு அரக்கன்களாக உள்ள நடிகர்கள் சியான் விக்ரம், எஸ்ஜே சூர்யா ஆகியோரை நடிக்கவிட்டு, அதில் சிறந்த பெர்பாமென்ஸை அவரே செலக்ட் செய்து, அந்த மாதிரி நடிச்சீங்களே, அப்படியே நடியுங்க என்று கூறி, படப்பிடிப்பை நடத்தி வருகிறார். நடிப்பு அரக்கன்களை நடிக்க வைத்தால், டைரக்டருக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா, என்று படப்பிடிப்பு குழுவினர் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.





