- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் ரிலீஸான 3 நாட்களுக்கு விமர்சனங்களுக்கு தடை கோருவது ஏன்? நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம்...

படம் ரிலீஸான 3 நாட்களுக்கு விமர்சனங்களுக்கு தடை கோருவது ஏன்? நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் – இந்த காரணங்கள் நியாயமானதுதானா?

- Advertisement -

புதிய படங்களை விமர்சனம் செய்யும் சிலர் படத்தை தாறுமாறாக விமர்சித்து ஒரு சில தினங்கள் ஓட அந்த படத்தை ஓடவிடாமல் செய்து விடுகின்றனர். அதனால் 3 நாட்களுக்கு இதுபோன்ற விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தயாரிப்பாளர்களுக்கு எதிரானது அல்ல என்று அச்சங்கம் விளக்கம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, புதிதாக ரிலீஸாகும் படங்களின் விமர்சனங்களை பேஸ்புக் எக்ஸ் தளம் இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான 3 நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் எமது சங்கத்தின் கோரிக்கை, சமீப காலங்களில் சில ஊடகங்களில் தனிப்பட்ட வன்மத்துடன் சில படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனிமனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர, ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடகங்களுக்கும் எதிரானது அல்ல.

- Advertisement -

அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தால் தான் ஒட்டுமொத்தமாக 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறோம். இதே காரணத்துக்காக தான் ஏற்கனவே மலையாள திரைப்பட உலகமும் நீதிமன்றம் சென்றுள்ளது. பாரம்பரியமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர்களின் இணையதளங்களில் எப்போதும் திரைப்படங்களை, திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களை தரம் குறைத்து விமர்சிப்பது இல்லை.

சில ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் தவிர மீதமுள்ள அனைத்து ஊடகங்களும் திரைப்பட உலகுக்கு ஆதரவாக இருக்கின்றனர். பல திரைப்படங்களின் வெற்றிக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் பலமுறை திரைப்பட நிகழ்வுகளில் சொல்லி இருக்கிறோம். மீண்டும் இங்கும் சொல்ல விரும்புகிறோம். சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடகங்களுக்கும் எதிரானது அல்ல; ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது நமது சங்கத்தின் நோக்கம் இல்லை.

- Advertisement -

அதேபோல் அப்படிப்பட்ட நடுநிலையான ஊடகங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் எதிரானது அல்ல நமது சங்கத்தின் இந்த செயல்பாடு. நீதிமன்றத்தில் இருந்து இதுகுறித்து ஒரு சரியான வழிமுறை வரும் வரை தயாரிப்பாளர்கள், தங்களது படங்களை அந்த படத்திற்கான பத்திரிகை தொடர்பாளர்கள் பரிந்துரைக்கும் ஊடகங்கள், புதிய படங்களை பார்த்து விமர்சனங்கள் வெளியிடுவதில் எந்த எதிர்ப்பும் நமது சங்கத்தில் இருந்து இல்லை.

விரைவில் சட்டரீதியாக நீதிமன்றத்தில் இதற்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறோம். தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே நமது சங்கம், இந்த முயற்சியை எடுத்துள்ளது. எனவே இந்த விளக்கத்தையும் செயல் முறையையும் தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்