தனது காதல் மனைவியை பிரிந்த நடிகர் ரவி மோகன் இப்போது ஹீலர் மற்றும் பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இவர்களது நட்பு, அடுத்தகட்டமாக திருமணத்தில் முடியும் சூழல் உருவாகி உள்ளது. இனி என் அழகான துணை கெனிஷா தான். அவரால்தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என அறிக்கை வெளியிட்டார் நடிகர் ரவி மோகன்.
என் பிள்ளைகளுக்கு நான் எப்போதுமே நான் அப்பா தான். நான் என் மனைவியை தான் பிரிந்தேனே தவிர பிள்ளைகளை அல்ல. அவர்களுக்காகவே நான் வாழ்கிறேன். எப்போது நான் வீட்டை விட்டு வெளியே வந்தேனோ அப்போதே ஆர்த்தி என்னுடைய முன்னாள் மனைவி ஆகி விட்டார் என்றும் அந்த அறிக்கையில் ரவி மோகன் தெளிவுபடுத்தி இருந்தார்.
இந்த சூழலில் ஆர்த்திக்கு ஆதரவாக குஷ்பு திரிஷா ராதிகா சரத்குமார் போன்றவர்கள் ஆதரவளித்துள்ள நிலையில், ஆர்த்தியின் தாயார் ரவி மோகனின் மாமியார் சுஜாதா விஜயகுமார், நான் கொடுமைக்காரி அல்ல. குடும்பத்தை பிரித்தவள் அல்ல. ரவி மோகன் நடித்த சில படங்களுக்காக ரூ. 100 கோடி வரை கடன் வாங்கி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
ஒரு தரப்பினர் ஆர்த்திக்கு ஆதரவாகவும் ஒரு தரப்பினர் ரவி மோகனுக்கு ஆதரவாகவும் இந்த விவகாரத்தில் கருத்துகளை கூறி வரும் நிலையில், ஹீலர் மற்றும் பாடகியான கெனிஷா மீதும் பலர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். ஆர்த்தியை ரவி மோகன் பிரிய காரணமே கெனிஷாதான் என்றும் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பாடகி கெனிஷா, தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது, எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையின் ஒரு அமைதி நிலவுகிறது. என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது.
என் மீது நீங்கள் குச்சிகளும், கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அதிலிருந்து மீண்டு வந்து விடுவேன். நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன். தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன். நாளைய விடியல்கள் என்றும் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களில் இருந்து என் ஆன்மா பாடுகிறது என்று அந்த பதிவில் கெனிஷா கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





