- Advertisement -
Homeபொழுதுபோக்குவடிவேலுவுக்கு ஜோடியாக நடிப்பது இந்த நடிகையா, காலக்கொடுமையா இருக்குதே கதிரவா?

வடிவேலுவுக்கு ஜோடியாக நடிப்பது இந்த நடிகையா, காலக்கொடுமையா இருக்குதே கதிரவா?

- Advertisement -

மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியல்களை இயக்கிய திருமுருகன் எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். இரண்டு படங்களிலும் ஹீரோவாக பரத் நடித்திருந்தார். இந்த 2 படங்களிலும் வடிவேலு காமெடி ரோல் செய்திருப்பார்.

இதில் எம்டன் மகன் என முதலில் பெயர் வைக்கப்பட்டு, பிறகு எம் மகன் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட படத்தில் ஒரு காட்சியில், வடிவேலு நாசர் குறித்து விமர்சிப்பார். அப்போது குரங்குக்கு வாழ்க்கைப்பட்டா மரத்துக்கு மரம் தாவித்தானே ஆகணும் என்பார்.

- Advertisement -

அதுபோல்தான் தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகையர் வாழ்க்கை பயணமும் இருக்கிறது. மார்க்கெட் உள்ள காலத்தில், மிகப்பெரிய அளவில் பேசப்படும் நடிகர், நடிகைகள் ஒரு கட்டத்தில் முதுமையாலோ அல்லது மார்க்கெட் சரிவின் காரணமாகவே சினிமாவில் இருந்தால் எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் நடிக்க வேண்டும் என்ற அவல நிலை ஏற்பட்டு விடுகிறது.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகளில் சிக்கி, 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் நாய் சேகராக நடிக்க வந்தார். அதன்பிறகு மாமன்னன் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

- Advertisement -

இப்போது மீண்டும் பகத் பாசில், வடிவேலு நடிக்கும் புதிய படம் உருவாகிறது. இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பது நடிகை சித்தாரா. இவர் ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான முன்னணி நடிகையாக வலம் வந்தவர். புதுவசந்தம் படத்தில் நடித்த, இயக்குநர் விக்ரமனின் அறிமுக நாயகி இவர்.

ஆனால் இப்போது திருமணமே செய்யாமல், 50 வயது ஆன நிலையில் சீரியல்களில் நடித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் மிக பிஸியாக நடித்து வந்த சித்தாரா, இப்போது மார்க்கெட் இழந்ததால் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்