- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படத்தில் கமல் அப்படி ஒரு வேலையை பார்த்துப்புட்டாரா? இந்தியன் 3 விஷயத்தில் உடனே இறங்கி...

அமரன் படத்தில் கமல் அப்படி ஒரு வேலையை பார்த்துப்புட்டாரா? இந்தியன் 3 விஷயத்தில் உடனே இறங்கி வந்த லைகா நிறுவனம் – உலக நாயகன்னா சும்மாவா?

- Advertisement -

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் சக்கைப் போடு போட்டு வருகிறது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக சிவகார்த்திகேயன் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமரன் அமைந்துள்ளது.

வழக்கமாக காதல் கலந்த காமெடி படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம், அடுத்த நகர்வுக்கான ஒரு சிறந்த ஆரம்பமாக அமைந்து, இனி ஆக்‌ஷன் ஹீரோவாக அவர் அசத்துவதற்கான வாசலை திறந்து விட்டுள்ளது. அதிலும் இந்து ரேபேகா வர்கீஸ் கேரக்டரில் இந்த படத்தில் சாய்பல்லவி வாழ்ந்து காட்டி ரசிகர்களை அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

அமரன் படம் பெரிய வெற்றிப் பாதையில் பயணித்து வரும் நிலையில், ஒரு முக்கியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அமரன் படம் தயாரான பின்பு, படத்தின் தயாரிப்பாளராக நடிகர் கமல்ஹாசன் படத்தை பார்த்திருக்கிறார். அப்போது படத்தில் சேர்க்க வேண்டிய விஷயங்கள், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து நோட்ஸ் எடுத்திருக்கிறார்.

அதன்பிறகு படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை அழைத்து அரைநாள் அவர்களுக்கு பயிற்சி நடத்தியிருக்கிறார். இந்த காட்சிகளை மீண்டும் படத்தில் கட்டாயம் சேர்த்தால்தான் படம் முழுமையடையும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் அமரன் படத்தில் கமல் சொன்ன காட்சிகள் அனைத்தும் மீண்டும் படம் பிடித்து சேர்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்பிறகுதான் படம் ரிலீஸ் செய்யப்பட்டு, சகல விதங்களிலும் ரசிகர்களை திருப்தியபடுத்திய ஒரு முழுமையான படமாக அமரன் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார். அதனால் ஒரு நடிகராக, படத்தின் தயாரிப்பாளராக கமல்ஹாசனின் இந்த பங்களிப்பு, அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

இந்த தகவலை கேள்விப்பட்ட லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், கமல்ஹாசன் ஏற்கனவே கூறியபடி இந்தியன் 3 படத்தின் இன்னும் 30 நாள் படப்பிடிப்பை நடத்த உடனே அனுமதி தந்துள்ளது. ஏனெனில் இந்தியன் 3 படத்திலும் இதுபோல் சேர்க்கப்பட வேண்டிய காட்சிகளை எடுத்து மீண்டும் இணைத்தால்தான் படம் ரசிகர்களை திருப்திபடுத்தும் என கமல் அறிவுறுத்திய நிலையில், அமரன் படத்தில் கமலின் நடவடிக்கை இந்தியன் 3 படத்திலும் தொடர உதவியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்