- Advertisement -
Homeபொழுதுபோக்குஇறப்பதற்கு ஒருநாள் முன், இலங்கையில் பவதாரணி செய்த அந்த செயல் - மனதை உலுக்கிய மகளால்...

இறப்பதற்கு ஒருநாள் முன், இலங்கையில் பவதாரணி செய்த அந்த செயல் – மனதை உலுக்கிய மகளால் பதறிப்போன இளையராஜா

- Advertisement -

இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா மூத்த மகன், இளைய மகன் யுவன் சங்கர் ராஜா, மூன்றாவது செல்ல மகள் பவதாரணி. ஒலிப்பதிவு கூட்டத்தில் பல நேரங்களில் இளையராஜா மற்றவர்களிடம் கடுகடு என நடந்துக்கொண்டாலும் தனது மகள் பவதாரணி அங்கு வந்துவிட்டால், குழந்தையாக மாறி விடுவார். மகளுடன் உற்சாகமாக பல விஷயங்களை பேசிக்கொண்டு இருப்பார்.

மற்றவர்களுக்கு தான் பவதாரணி என்றாலும் இளையராஜா குடும்பம் சார்ந்த அனைவரும் அவரை செல்லமாக அழைப்பது பவதா தான். கங்கை அமரன், அவரது மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜிக்கும் இவர்தான் தங்கை என்பதால் நான்கு சகோதரர்களும் பவதாரணியை கொண்டாடுவர்.

- Advertisement -

இந்நிலையில் பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் என்பதே ஒரு மாதத்துக்கு முன்புதான் குடும்பத்தினருக்கே தெரிய வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் செய்த பரிசோதனைகள் மூலம் அது உறுதியாகி இருக்கிறது. இதை அறிந்தவுடன் இளையராஜா நொறுங்கிப் போய்விட்டார். குடும்பம் சார்ந்த அனைவரும் கலங்கிப் போய்விட்டனர்.

ஆனால் ஹீமோெதெரபி போன்ற சிகிச்சை தரும் அளவுக்கு உடல் ஆரோக்கியம் இல்லாத அவரை, இலங்கையில் உள்ள ஆயுர்வேதிக் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து, 10 நாட்களுக்கு முன்புதான் அங்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர். பவதாரணிக்கு தொடர்ந்து காய்ச்சல், உடல் வெப்பநிலை, பலவீனம் காரணமாக உடனடியாக அங்கும் சிகிச்சையை துவங்கவில்லை.

- Advertisement -

இந்த சூழலில், இலங்கையில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் ஒப்புக்கொண்ட இசைக்கச்சேரியில் பங்கேற்க 3 நாட்களுக்கு முன் இளையராஜா இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு தனது அப்பா இருப்பதை தெரிந்துக்கொண்ட பவதாரணிக்கு உடனே அப்பாவை பார்க்க வேண்டும் என தோன்றியிருக்கிறது. உடனே மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்ஸியில் ஏறி, அவர் கச்சேரி செய்யும் பகுதிக்கே நேரில் வந்துவிட்டார் பவதாரணி. தனது மகள் நேரில் வந்ததை அறிந்து பதறிப்போன இளையராஜா, நானே மருத்துவமனைக்கு வருகிறேன். நீ எதுக்கும்மா சிரமப்பட்டு இங்கு வந்தாய் எனக்கேட்டு அதே டாக்ஸியில் திருப்பி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் டாக்ஸியில் பயணித்த பவதாரணிக்கு, பொல்யூசன் காரணமாக அன்றே மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து உடல்நலம் மிகவும் பாதித்த நிலையில் நேற்று மாலை இறந்திருக்கிறார். கடைசி நேரத்தில், கடைசியாக தந்தையை பார்க்க தன் உடல் நிலையை பொருத்தாமல் டாக்ஸி பிடித்து வந்திருக்கிறார் பவதாரணி. இதில் மற்றொரு விஷயம், அவருக்கு இப்படி கல்லீரல் புற்றுநோய் இருப்பதே கடைசி வரை தெரியாது. ஒட்டுமொத்த குடும்பமும் அதை மறைத்துதான் அவரை காப்பாற்ற நினைத்திருக்கிறது. ஆனால் அது துரதிஷ்டவசமாக நடக்காமல் போய்விட்டது.

- Advertisement -

சற்று முன்