கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரக்சிதா ராம். இவர் சமீபத்தில் தனது 34வது பிறந்தநாளை பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்கள் புடைசூழ திருவிழா போல கொண்டாடினார். அப்போது நடிகை ரக்சிதா ராம் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரும் தன்னுடன் செல்ஃபி எடுக்க வாய்ப்பளித்தார்.
அந்த நேரத்தில் ஒரு ரசிகர் அவரிடம் நெருங்கி வந்து செல்ஃபி எடுத்தார். செல்ஃபி எடுத்துவிட்டு திரும்பிச் செல்லும் போது திடீரென அவர் ரக்சிதா ராமின் கன்னத்தைப் பிடித்து கிளினினார். அந்த ஒரு நொடியில் அதிர்ச்சி அடைந்த ரக்சிதா ராம், இவர் யார் என்று யோசித்தவர் லேசாக கோபமாகி பின்பு சிரித்து விட்டு அமைதியானார். நடிகையின் கன்னத்தை ரசிகர் கிள்ளிச் சென்ற காட்சி இணையத்தில் வைரலானது.
இதே நிகழ்வில் மற்றொரு ரசிகர் எல்லை மீறி அவரை கட்டிப்பிடிக்க முயன்ற போது, தன்னை தொட வேண்டாம் என்று கூறி அவரை நடிகை ரக்சிதா ராம் எச்சரிக்கை செய்து அனுப்பினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் தன்னுடன் செல்ஃபி எடுக்க உற்சாகமாக சிரித்தபடி போஸ் கொடுத்த ரக்சிதா ராம், சில ரசிகர்களை தன்னருகே அழைத்து அவரே செல்போனில் செல்ஃபி எடுத்தும் கொடுத்தாா்.
இதுகுறித்து ரக்சிதா ராம் கூறியதாவது, என் ரசிகர்கள் என் மீது வைத்திருந்த அன்பை தவறான நோக்கத்தில் வெளிப்படுத்தவில்லை. இதை பார்த்த என் நண்பர்கள் உனக்கு கோபம் வரவில்லையா? என்று கேட்டனர். ஒருவர் குழந்தையை கொஞ்சி அன்புடன் அரவணைப்பது போலத்தான் என் ரசிகரும் அன்பை வெளிப்படுத்தினார். அதில் எந்தவிதமான தவறான நோக்கமும் இல்லை.
ஒருவேளை அது தவறான தொடுதலாக இருந்தால் நிச்சயமாக நான் கண்டித்து இருப்பேன். ஆனால் ஒருவர் தூய்மையான அன்பை வெளிப்படுத்தும்போது அதை நான் எப்படி கண்டிக்க முடியும்? நான் அதை அது பாராட்டுதலாகவே எடுத்துக் கொண்டேன். உண்மையில் அந்த அன்பை நான் மிகவும் ரசித்தேன் என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் நடிகை ரக்சிதா ராம் முக்கிய கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு நடிகர் தர்ஷனின் புல்புல் என்ற படத்தின் மூலம் நடிகை ரக்சிதா ராம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் ரன்னா இரத்தாவரா பாஞ்சரி அயோக்யா பாரதே கிராந்தி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கிரிமினல் லில்லி தாலி மற்றும் சபரி செர்ச்சிங் பார் ராவணா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.





