- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் இன்னமும் நீடிக்கும் சஸ்பென்ஸ்… இந்தியன் 2 படம் ரிலீஸ் நாளில்தான் விடை தெரியுமா?...

அந்த விஷயத்தில் இன்னமும் நீடிக்கும் சஸ்பென்ஸ்… இந்தியன் 2 படம் ரிலீஸ் நாளில்தான் விடை தெரியுமா? – எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இயக்குனர் ஷங்கர் ரசிகர்கள்

- Advertisement -

கடந்த 1996ம் ஆண்டில் வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதிலும், இந்தியன் தாத்தா கேரக்டர், தமிழ் சினிமா வரலாற்றில் அழுத்தமாக பதிந்தார். சேனாபதி கேரக்டரில் நடித்த கமல்ஹாசனுக்கு, மத்திய அரசு சிறந்த நடிகர் தேசிய விருது வழங்கி கௌரவித்தது.

இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். மாயா மச்சீந்திரா, அக்கடான்னு நாங்க துணி போட்டா, பச்சைக்கிளிகள் தோளோடு, கப்பலேறி போயாச்சு, டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா என இந்தியன் படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் பாடல்களாக அமைந்தன. இப்போதும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

- Advertisement -

இந்தியன் படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சுகன்யா பாட்டி கேரக்டரில் இந்தியன் தாத்தா மனைவியாக நடித்திருந்தார். மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, கவுண்டமணி செந்தில், நிழல்கள் ரவி, அஜய் ரத்னம், நெடுமுடி வேணு, பாலாசிங், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வெற்றிப் படமாக இருந்தது.

இந்த படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் வருகிற ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதன்பிறகு இப்போதே எடுத்து முடிக்கப்பட்டுள்ள இந்தியன் 3 படமும், வருகிற 2025ம் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

- Advertisement -

இந்தியன் படத்தில் மிகவும் கவனிக்கப்படும் கதாபாத்திரங்களாக நடித்தவர்களில் நடிகை சுகன்யா மிக முக்கியமானவர். அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை, இந்தியன் 2 படத்தில், சுகன்யா கேரக்டர் தேவைப்படவில்லை என்று இயக்குனர் ஷங்கரே, செய்தியாளர்களிடம் பேசுகையில் தெளிவாக கூறிவிட்டார். எனினும் இந்தியன் 2 படத்தில் சுகன்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எ்னறு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே போல் இந்தியன் படத்தில், மகன் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. அவர் இந்தியன் 2 படத்தில் இருக்கிறாரா, இல்லையா என்பதில் இன்னமும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஏனெனில் முதல் பாகத்தில் அவரது நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. இப்போது பிரமோ நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்றுள்ள கமல்ஹாசனை, மனிஷா கொய்ராலா சந்தித்து இருக்கிறார், அந்த புகைப்படங்களை கமல் பதிவிட்டுள்ள நிலையில், இந்தியன் 2 படத்தில் கேமியோ ரோலில் அவர் நடித்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் படம் ரிலீஸ் ஆனால்தான் உறுதியாக தெரிய வரும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்