- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போ அத்தனையும் பொய்யா கோபால்? தி கோட் 4வது சிங்கிளை பார்த்து ஏமாந்து போன தளபதி...

அப்போ அத்தனையும் பொய்யா கோபால்? தி கோட் 4வது சிங்கிளை பார்த்து ஏமாந்து போன தளபதி ரசிகர்கள் – திரிஷா அப்ப இல்லவே இல்லையா?

- Advertisement -

50 ஆண்டுகளுக்கு முன் 1970களில் வெளிவந்த புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடிப்பு இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு காட்சியில் போலீஸ் சிஐடியான சரோஜா தேவி, சிவாஜியை நடித்து ஏமாற்றி இருக்கிறார் என்ற உண்மை தெரிய வரும். அப்போது, அத்தனையும் நடிப்பா கோபால் என்ற சரோஜா தேவி பேசும் வசனம் இன்றும் டிரண்டிங்கில் உள்ளது.

இப்போது, அதே வசனத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவை பார்த்து விஜய் ரசிகர்கள் கேட்கத் துவங்கி விட்டனர். தி கோட் படத்தில் இதுவரை 4 பாடல்கள், 4 சிங்கிள்களாக வெளிவந்த நிலையில் ஒரு பாடல் கூட ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹிட் பாடலாக இருக்கவில்லை. என்னய்யா இது, இப்படி சொதப்பி இருக்கிறாங்க என்றுதான் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

விசில் போடு பாடல் தந்த ஏமாற்றம், இது விஜய் பாட்டுதானா என்று ரசிகர்களை கேள்வி கேட்க வைத்தது. அதில் வந்த விஷூவல் காட்சிகளில் கூட விஜயை காட்டிலும் பிரசாந்த் தான் முன்னிலைப்படுத்தப்பட்டார். விஜய் பின்னுக்கு தள்ளப்பட்டு இருந்தார். முதல் பாடலே பெரிய ஹிட் கொடுக்கவில்லை.

அடுத்து 2வது சிங்கிளாக வந்த சின்ன சின்ன கண்ணில் என்ற பாடலை நடிகர் விஜயுடன், மறைந்த பின்னணி பாடகி, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணி, ஏஐ தொழில் நுட்பத்தில் பாடும்படி செய்திருந்தனர். இந்த பாடலை கேட்ட போது, இதுவும் எந்த விதத்திலும் ரசிகர்களை கவரும்விதமாக இல்லை. ஏதோ ஒரு பழைய பாடலை கேட்பது போல தான் இருந்தது.

இதையடுத்து வந்த நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு என்ற 3வது சிங்கிளும் அட கஷ்ட காலமே என்றுதால் விஜய் ரசிகர்களை புலம்ப வைத்தது. இந்த பாடலை கங்கை அமரன் எழுதியிருக்க, யுவன் சங்கர் ராஜா பாடியிருந்தார். இந்த பாட்டும், ரசிகர்களை வெறுப்படையச் செய்த நிலையில் நேற்று மாலை 4வது சிங்கிளாக வெளியான மட்ட பாடலும் ரசிகர்களை சரக்கு அடிக்காமலேயே மட்ட ஆக்கி விட்டது.

இதற்கிடையே இந்த பாடலில் நடிகை திரிஷா சேர்ந்து குத்தாட்டம் போட்டதாக தகவல் பரவிய நிலையில், ஒரு சின்ன கிளிப்பிங்ஸ்சில் கூட திரிஷா உருவம் காட்டப்படவில்லை. திரிஷா விஜயுடன் ஆடியிருக்கிறாரா என்ற கேள்விக்கு, வெங்கட்பிரபு அப்படியா, எனக்கு தெரியாதே என்று கூறியதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அப்படி என்றால் கடைசியில் அதுவும் பொய்யாகி விட்டதா என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் தி கோட் படம் வெளியானால், இந்த மட்ட பாடலில் திரிஷா நிச்சயம் வருவார் என்று படக்குழு தரப்பில் யாரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சற்று முன்