- Advertisement -
Homeபொழுதுபோக்குகேபிஒய் பாலா சொன்ன அந்த ஒரு விஷயம், அத்தனை பப்ளிசிடியும் இதுக்காக தானா? - விளாசித்...

கேபிஒய் பாலா சொன்ன அந்த ஒரு விஷயம், அத்தனை பப்ளிசிடியும் இதுக்காக தானா? – விளாசித் தள்ளிய பிரபலம்

- Advertisement -

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. பிறகு அவர் குக் வித் கோமாளி சீசன் 2 விலும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அதுதவிர விஜய் டிவி ரியாலிட்டி ஷோ களில் இடையிடையே வந்து, கமெண்ட் அடித்து கலாட்டா செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கேபிஒய் பாலா.

சமீப காலமாக கேபிஒய் பாலா, சமூக வலைதளங்களில் செம டிரெண்டிங் ஆகி வருகிறார். அதற்கு காரணம், அவர் மற்றவர்களுக்கு தேடிச் சென்று செய்யும் உதவிகள்தான். குறிப்பாக யார் என்ன கஷ்டப்பட்டாலும், அது அவரது கவனத்திற்கு வந்தால், உடனடியாக அதை அவர்களுக்கு உதவுவதற்கு முன் வந்து விடுகிறார்.

- Advertisement -

சென்னையில் கடந்த டிசம்பர் மாதத்தில் கனமழை ஏற்பட்டு, மக்கள் பாதிப்பு அடைந்த போது, 5 லட்சம் ரூபாய் வரை மக்களுக்கு உதவினார். ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தார். பெட்ரோல் பங்கில் வேலை செய்த ஒரு ஊழியர், எனக்கு சொந்தமாக சைக்கிள் கூட வாங்க வசதி இல்லை என்று புலம்பிய வீடியோ வைரலான நிலையில், அவருக்கு புதிய பைக் வாங்கிக் கொடுத்து அசத்தினார். சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் மக்களுக்காக 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை கேபிஒய் பாலா வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இப்படி தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து பிரபலமாகி வரும் கேபி ஒய் பாலா, நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த மேடையில் அவர் பேசியதுதான் இப்போது அவர் மீதான ஒரு விமர்சனத்தை கொண்டு வந்திருக்கிறது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, கேபிஒய் பாலா, மக்களுக்கு நன்மை செய்வதன் மூலம் நல்ல பப்ளிசிட்டியை பெற்றார் என்றாலும், அவர் கூறியிருக்கும் ஒரு விஷயம் இப்போது வேறு விதமான ஒரு பார்வையை அவர் மீது ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக ராகவா லாரன்ஸ், இத்தனை உதவிகளை செய்து கொண்டிருக்கிறாயே, உன்னுடைய ஆசை என்னவென்று அந்த நிகழ்ச்சியில் மேடையில் கேட்ட போது, நான் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்று கூறினார். அதைக் கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்த லாரன்ஸ் எதற்காக நீ சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார் என்று கேட்டார். அதற்கு கேபிஒய் பாலா, சினிமாவில் ஹீரோவாக நடித்தால் இன்னும் கோடி கோடியாக சம்பாதிக்கலாம். மக்களுக்கு இன்னும் நிறைய உதவிகளை செய்யலாம். இன்னும் நான் மக்கள் மத்தியில் பிரபலமாவேன் என்று தெரிவித்தார்.

மக்களுக்கு உதவ வேண்டும் என்றால், அது சினிமா ஹீரோவாகி தான் உதவ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. கேபிஒய் பாலா இப்படி கூறியிருப்பது, அவர் மற்றவர்களுக்கு உதவி இப்படி பப்ளிசிட்டி தேடிக்கொண்டதே அதன் மூலமாக தன்னை ஒரு சினிமா ஹீரோவாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தான் இப்படி உதவிகளை செய்து வருகிறாரா என்ற பலத்த விமர்சனத்தை எழுப்பி உள்ளது.என செய்யாறு பாலு பேசியது, இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்