- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஏஆர் முருகதாஸூக்கு நடிகர் சல்மான்கான் போட்ட திடீர் கண்டிஷன், சிவகார்த்திகேயன் படத்தை முடிப்பதில் நீடிக்கும்...

இயக்குனர் ஏஆர் முருகதாஸூக்கு நடிகர் சல்மான்கான் போட்ட திடீர் கண்டிஷன், சிவகார்த்திகேயன் படத்தை முடிப்பதில் நீடிக்கும் சிக்கல்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் ரூ. 325 கோடி வசூலை கடந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் அதிகம் வசூல் சாதனை புரிந்தது அமரன் படம்தான். தமிழ்நாட்டில் மட்டுமே தியேட்டர் ஷேர் ஆக ரூ. 75 கோடி தந்துள்ளது.

இதுவரை நடிகர் அஜீத்குமார் நடித்த படங்கள் தமிழ்நாட்டில் தியேட்டர் ஷேர் ஆக ரூ. 60 கோடியை கடக்காத நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ரூ. 75 கோடியை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவரது சம்பளமும் இப்போது ரூ. 75 கோடியாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அமரன் படத்தில் நடிப்பதற்கு முன்பே, அயலான் படம் வெளியான பிறகு சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆன படம் எஸ்கே 23. இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கினார். கன்னட நடிகை ருக்மணி வசந்த் இதில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அமரன் படத்திலும் கமிட் ஆகி சிவகார்த்திகேயன் நடித்து வந்தார்.

இதற்கிடையே இந்தியில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு ஏஆர் முருகதாஸூக்கு வந்ததால், சிவகார்த்திகேயன் படத்தை இடையிடையே விட்டுவிட்டு பாலிவுட் பக்கம் சென்று அந்த படத்தையும் ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்து வந்தார். சல்மான்கான் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், தமிழ்நாட்டுக்கு வந்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்கினார்.

- Advertisement -

இப்படி இரண்டு படங்களையும் மாறி மாறி ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்து வந்த நிலையில், சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படம் வருகிற ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்குள் படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை செய்து படத்தை ரிலீஸ் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட நடிகர் சல்மான்கான், சிக்கந்தர் படப்பிடிப்பை முடித்துவிட்டு பிறகுதான் நீங்கள் தமிழ்நாட்டுக்கு சென்று மற்ற தமிழ் படங்கள் பணிகளை தொடர வேண்டும். ரம்ஜான் ரிலீஸ் என சிக்கந்தர் படத்தை அறிவித்து விட்டதால், இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் சிக்கந்தர் ஷூட்டிங்கில் ஏஆர் முருகதாஸ் பிஸியாக இருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயனும் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்