இன்றைய தமிழக மக்கள் ஒருபுறம் அரசியல் கட்சிகளாலும் மறுபுறமும் சினிமாக்காரர்களாலும் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இன்றைய தமிழ் சமுதாயத்தை ஒழிக்காமல் விடப் போவது இல்லை என்பது போல மக்களின் அடிப்படை உரிமைகளை அரசியல் கட்சிகள் ஒருபுறம் பறித்துக்கொண்டு இருக்கின்றன.
மறுபுறம் சினிமாவில் நடிக்க தெரியாத நடிகர்கள் எல்லாம் அரசியல் கட்சி துவங்கி விடுகிறார்கள். சினிமா திரையில் வந்த பிரபலத்தை மட்டுமே நம்பி அரசியல்வாதிகளாக மாறும் அவர்கள் மீது மக்களும் அபார நம்பிக்கை வைத்து ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தும் விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்திய சட்டசபை தேர்தலில் நடித்து விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் நடிகர் அஜீத்குமார் ரசிகர்கள் சார்பில் புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் துவங்கிய இந்திய புதிய கட்சிக்கு தமிழக மக்கள் கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் சிவப்பு மஞ்சள் நீலம் அடங்கிய கட்சி கொடியுடன் அஜீத் புகைப்படத்துடன் கொள்கை முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்களையும் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் ரசிகர்களை ஒருங்கிணைக்கவும் அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து அவரது ரசிகர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்துள்ள நிலையில் அஜீத் ரசிகர்களாக பல ஆண்டுகளாக பாடுபட்ட தங்களுக்கும் அரசியல் களத்தில் அடையாளமும் அங்கீகாரமும் வேண்டும் என்ற சீரிய லட்சிய நோக்கத்தில் இந்த கட்சியை துவங்கியிருப்பதாக அந்த கட்சியின் நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.
மேலும் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பதவி காலியிடமாக உள்ளது. எப்போது வந்தாலும் அஜீத்குமாருக்கு அந்த பதவி வழங்கப்படும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். ஏற்கனவே விஜய் என்ற நடிகர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டு அரசியல் அலங்கோலமாகி விட்டது. இனி அஜீத் ரசிகர்களும் களத்துக்கு வருகிறார்களா? இது என்னடா தமிழ்நாட்டு மக்களுக்கு வந்த சோதனை என்று இப்போதே புலம்ப துவங்கி விட்டனர்.





